PAN card is disabled if tax evasion.Income Tax Departmentவரி ஏய்ப்பு செய்பவர்கள் மீது எத்தகைய நடவடிக்கைகள் எடுக்கலாம் என்பது குறித்த அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளதாகவும் அதன்படி முதல் கட்டமாக வரி ஏய்ப்பு செய்பவர்களின் நிரந்தர கணக்கு எண்ணை (பான்) முடக்குவது, சமையல் எரிவாயு மானியத்தை நிறுத்துவது உள்பட ஒருசில அதிரடி நடவடிக்கைகளை எடுக்க வருமான வரித்துறை முடிவு செய்துள்ளது.

1. வரி ஏய்ப்பு செய்தால் அவர்களுடைய பான் கார்டை முடக்கி, முடக்கப்பட்ட `பான்’ அட்டை விவரங்கள் சொத்து பதிவாளருக்கு அனுப்பி வைக்கப்படும். இதன் மூலம் சம்பந்தப்பட்ட நபர் எவ்வித அசையா சொத்துகளை பதிவு செய்ய முடியாது.

2. வரி ஏய்ப்பாளர்களின் விவரம் அனைத்து வரி அலுவலகங்களுக்கும் அனுப்பப்படும். இதன் மூலம் நாடு முழுவதும் உள்ள பொதுத்துறை வங்கிகளில் கடன் பெறுவது தடுக்கப்படும்.

3. வங்கிகளில் கடன் பெற்று அதை சரியாக திரும்ப செலுத்தாதவர்கள் விவரங்களை அளிக்கும் சிபில் அமைப்பின் தகவல் தொகுப்பை பெறவும் வருமான வரித்துறை முடிவு செய்துள்ளது. இதன் மூலம் வரி ஏய்ப்பு செய்வோரின் நிதி சார்ந்த நடவடிக்கைகளை கண்காணிக்க முடியும். அத்துடன் அவர்களது சொத்துகளை முடக்கவும் வழியேற்படும்.

வருமான வரித்துறை மேற்கொள்ளும் மேற்கண்ட அதிரடி நடவடிக்கைகள் வரி ஏய்ப்பாளர்களின் எண்ணிக்கையைக் குறைக்க உதவும் என்று வருமான வரித்துறை அதிகாரிகள் கூறுகின்றனர்.

English Summary:PAN card is disabled if tax evasion.Income Tax Department