hse-exam-resultபிளஸ் 2 தேர்வு எழுதிய மாணவர்கள் இன்று தேர்வு முடிவுகளை தெரிந்து கொண்ட நிலையில் வரும் 19-ஆம் தேதி முதல் தங்களுக்கான தற்காலிக மதிப்பெண் சான்றிதழைப் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என்று அரசுத் தேர்வுகள் துறை இயக்குநர் தண்.வசுந்தரா தேவி அறிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:

மார்ச் மாதம் நடைபெற்ற பிளஸ் 2 தேர்வு முடிவுகள் மே 17-ஆம் தேதி காலை 10.31 மணிக்கு வெளியானது. முடிவுகளை தெரிந்து கொண்ட மாணவர்கள் தனித்தேர்வர்கள் மே 19-ஆம் தேதி முதல் தங்களுக்கான தற்காலிக மதிப்பெண் சான்றிதழை தங்களது பிறந்த தேதி, பதிவெண் ஆகிய விவரங்களை அளித்துwww.dge.tn.nic.in என்ற இணையதளத்தில் தாங்களே பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

மேலும் மே 21-ஆம் தேதி முதல் தேர்வர்கள் தாங்கள் படித்த, தேர்வெழுதிய பள்ளி, மையத்தின் தலைமை ஆசிரியர் மூலமாகவும் தங்களது தற்காலிக மதிப்பெண் சான்றிதழைப் பெற்றுக் கொள்ளலாம் என்று செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது

மேலும் ஒரிஜினல் மதிப்பெண் சான்றிதழ் இன்னும் ஒரு வாரம் கழித்து வழங்கப்படும் என தேர்வுத்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

English Summary : Plus 2: May 19 marks the first temporary facility to download the certificate.