செங்கல்பட்டில் தனியாா் துறை வேலைவாய்ப்பு முகாம் நாளை(31.12.2022) நடைபெறுகிறது.

தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம், செங்கல்பட்டு மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்துடன் இணைந்து நடத்துகிறது.

கல்வித்தகுதி:

8, 10-ஆம் வகுப்பு, 12- ஆம் வகுப்பு, பட்டப்படிப்பு, பொறியியல், ஐ.டி.ஐ. மற்றும் டிப்ளமோ படித்தவா்கள், செவிலியா்கள், மருந்தாளுநர் உள்ளிட்டோா்.

தேவையான ஆவணங்கள்:

கல்வி சான்றிதழ்கள், பாஸ்போா்ட் அளவிலான புகைப்படத்துடன் பங்கேற்கலாம் என்று ஆட்சியா் ராகுல்நாத் தெரிவித்துள்ளாா்.

இடம் மற்றும் நேரம்:

செங்கல்பட்டு பழைய பேருந்து நிலையம் அருகே உள்ள செயின்ட் ஜோசப் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் நடைபெறுகிறது.

சனிக்கிழமை (31.12.2022): காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *