எஸ்எஸ்எல்சி, பிளஸ் 2 மாணவர்கள் மேற்படிப்புக்கு உடனடியாக விண்ணப்பிக்கும் வகையில் அவர்களுக்கு தற்காலிக மதிப்பெண் சான்றிதழ் வழங்க அரசு தேர்வுத்துறை முடிவெடுத்துள்ளது . இதுகுறித்து பள்ளிக்கல்வித்துறை முதன்மைச் செயலர் டி.சபீதா கூறியதாவது:-

பிளஸ் 2, எஸ்எஸ்எல்சி தேர்வு முடிவுகள் வெளியாகி, மாணவர்களுக்கு மதிப்பெண் சான்றிதழ்கள் கிடைக்க 10 நாட்களுக்கு மேல் ஆகிவிடுகிறது. அவர்கள் மேற்படிப்புக்கு உடனடியாக விண்ணப்பிக்கும் வகையில் இந்த ஆண்டு அவர்களுக்கு தற்காலிக மதிப்பெண் சான்றிதழ் (புரவிஷனல் சர்டிபிகேட்) வழங்கப்படும். இச்சான்றிதழில் அவர்களின் புகைப்படம், பதிவு எண், மதிப்பெண் விவரம் உள்ளிட்ட விவரங்கள் இடம்பெற்றிருக்கும். இந்த தற்காலிக சான்றிதழ் 90 நாட்களுக்கு செல்லுபடியாகும். வழக்கம்போல் நிரந்தர மதிப்பெண் சான்றிதழும் வழங்கப்படும்.

மேலும் மாணவர்கள் மறுகூட்டல் மற்றும் மறுமதிப்பீடு செய்வதற்காக விடைத்தாள் நகல் வேண்டி விண்ணப்பிக்கும்போது நகல் எடுத்து வழங்க தாமதமாகிவிடுவதால் விடைத்தாள்களை ஸ்கேன் செய்து வெகுவிரைவாக வழங்கஏற்பாடு செய்ய பட்டுள்ளதாக தெரிவித்தார் .

English Summary : Tamil Nadu examination center has decided to provide temporary professional certificate for 10 and +2 students in advance to apply for higher studies.