puzhaltiபுழல் சிறையில் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட கைதிகளுக்கு ஒவ்வொரு ஆண்டும் பட்டய படிப்பு கற்று தரப்பட்டு வரும் நிலையில் கடந்த வருடத்தில் இருந்து கம்ப்யூட்டர் அனிமேஷன் பட்டய படிப்பு வகுப்புகளும் நடைபெறுகிறது. கடந்த ஆண்டு இந்த படிப்பு 25 கைதிகளுக்கு கற்று கொடுக்கப்பட்டது.

சிறைக்குள் தண்டனை அனுபவித்தாலும் சிறையில் இருந்து அவர்கள் விடுதலையானது மீண்டும் மனம் திருந்தி வாழ கைத்தொழில் ஒன்று அவசியம் என்ற வகையில் தற்போது புழல் சிறையில் கைதிகளுக்கு தொழில் கல்வியும் அளிக்கப்படுகிறது.

அதன் அடிப்படையில் 25 ஆயுள் கைதிகள் கம்ப்யூட்டர் அனிமேஷன் படிப்பை முடித்தனர். அவர்களுக்கு படிப்பு சான்றிதழ் வழங்கும் நிகழ்ச்சி நேற்ரு சிறை வளாகத்தில் நடந்தது. இந்திய சமுதாய கல்லூரி இயக்குனர் டாக்டர் ஜேக்கப், திறந்தவெளி பல்கலைக்கழக பதிவாளர் டாக்டர் எஸ்.விஜயன், தேர்வு கட்டுப்பாட்டாளர் ஜாபர், துறை தலைவர் தியாகராஜன் ஆகியோர் கலந்து கொண்டு சான்றிதழ்களை வழங்கினர். சிறை கண்காணிப்பாளர் ருக்மணி பிரியதர்ஷினி, எஸ்.சண்முகம், ராபர்ட், ராஜேந்திரன் ஆகியோர் சிறப்புரையாற்றினார்கள்.

நிகழ்ச்சிக்கான அனைத்து ஏற்பாடுகளையும் ஆசிரியர் லாரன்ஸ், அமலதாஸ், திருஞான சம்பந்தம், காவலர் வினோத் செய்திருந்தனர். நிகழ்ச்சியின்போது சிறைவாசிகளின் அனுபவ பகிர்வும், கலைநிகழ்ச்சியும் நடந்தன.

English Summary: Puzhal prison, 25 prisoners who were educated in the computer certificate.