ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்திகாந்த தாஸ் செய்தியாளர்கள் சந்திப்பின் முக்கிய அம்சங்கள்.

 • ரெப்போ வட்டி விகிதம் 4.4 % லிருந்து 4% ஆக குறைக்கப்படுகிறது; குறைக்கப்பட்ட வட்டியில் வங்கிகள் கடன் வழங்கும்.
 • ரிவர்ஸ் ரெப்போ வட்டி விகிதமும் 3.35 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளது.
 • மாதத் தவணை செலுத்துவதற்கான கால அவகாசம் மேலும் 3 மாதங்கள் அவகாசம் அளிக்கப்படுகிறது. கால அவகாசம் ஜூன் மாதத்தில் இருந்து ஆகஸ்ட் மாதம் வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
 • பருப்புகள் உள்ளிட்ட பொருட்கள் விலை அடுத்த சில மாதங்களில் உயர வாய்ப்பு உள்ளது.
 • மொத்த உள்நாட்டு உற்பத்தி 2020-21ல் குறையும்.
 • தொழில் நிறுவனங்களுக்கான முதலீட்டு பற்றாக்குறையை சரி செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.
 • ஏற்றுமதி மற்றும் இறக்குமதியை மேம்படுத்த மாநிலங்களுக்கான நிதிப் பிரச்சினைகளை சரி செய்யவும் வங்கி நடவடிக்கை.
 • மூலதன கடன்கள் அளிக்கப்படும்.
 • சிறு தொழில்களுக்கு மேலும் 3 மாதங்களுக்கு கடன் வழங்க ஏற்பாடு.
 • நடப்பாண்டில் உள்நாட்டு உற்பத்தி வீழ்ச்சியை சந்திக்கும்.
 • மார்ச் மாதத்தில் தொழில்துறை உற்பத்தி 17 சதவிகிதமாக குறைந்துள்ளது.
 • வரும் காலாண்டில் ஜிடிபி வளர்ச்சி எதிர்மறையாக இருக்கும்.
 • ரிசர்வ் வங்கி சந்தை பொருளாதாரத்தை மேம்படுத்த கூடுதல் நடவடிக்கைகளை மேற்கொள்ளும்.
 • வீடு, வாகன கடன்களுக்கான கடன் தவணைகளை செலுத்த கூடுதலாக மூன்று மாதம் அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *