தமிழக அரசு வெளியிடப்பட்டுள்ள செய்தி குறிப்பில்

  • சென்னை மாநகர காவல் எல்லை பகுதி மற்றும் நோய் கட்டுப்பாடு பகுதியை தவிர பிற இடங்களில், காலை 7 மணி முதல் இரவு 7 மணி வரை ஆட்டோ, ரிக்‌ஷாக்களை இயக்கலாம் என தெரிவித்துள்ளது.
  • ஓட்டுநர் மற்றும் ஒரு பயணி மட்டும் வைத்து, வாகனங்களை இயக்க வேண்டும்.
  • பயணிகள் பயன்படுத்தும் வகையில், சானிடைசர் வைத்திருக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.
  • ஆட்டோ, ரிக்‌ஷா ஆகியவற்றை தினமும் மூன்று முறை கிருமி நாசினி தெளித்து சுத்தப்படுத்த வேண்டும்.

கொரோனா தொற்றின் தாக்கத்தை கட்டுப்படுத்த அரசு மேற்கொண்டு வரும் நடவடிக்கைகளுக்கு மக்கள் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என அதில் வேண்டுகோள் விடப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *