கர்நாடகா, கேரளா ஆகிய மாநிலங்களில் பெய்த அதிகனமழையால், தமிழகத்தில் அரிசி விலை வரலாறு காணாத வீழ்ச்சி அடைந்துள்ளது.

கர்நாடகா, ஆந்திரா, கேரளா ஆகிய மாநிலங்களில் இந்த ஆண்டு தென்மேற்கு பருவமழை அதிகளவில் பெய்ததால் அரிசி உற்பத்தி அதிகரித்து இருக்கிறது. மேலும் கர்நாடக அணைகளில் இருந்து திறக்கப்பட்ட உபரிநீர் தமிழகம் வந்தடைந்து, பல ஆண்டுகளுக்கு பிறகு காவிரியாற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதனால் தமிழகத்திலும் நெல் அறுவடை அதிகரித்தது.

இந்த நிலையில் கர்நாடக, ஆந்திரா மாநிலங்களில் இருந்து அரிசி வரத்து அதிகரித்துள்ளதால், தமிழகத்தில் அரிசி விலை வரலாறு காணாத அளவு வீழ்ச்சி அடைந்துள்ளது.

அதன் அடிப்படையில் தமிழகத்தில் விற்கப்படும் 25 கிலோ மூட்டை அரிசி விலை ரூ.50 முதல் ரூ.100 வரை குறைந்துள்ளது. தமிழகத்தில் ரூ.700-க்கு விற்கப்பட்டு வந்த ஏ.டி.டி. 47 ரக பொன்னி 25 கிலோ தற்போது ரூ.630 ஆகவும், ரூ.750-க்கு விற்கப்பட்ட கோ.51 பொன்னி ரூ.570 ஆகவும், ரூ.900-க்கு விற்கப்பட்ட டீலெக்ஸ் பொன்னி ரூ.800 ஆகவும் குறைந்துள்ளது.

மேலும் ரூ.1150-க்கு விற்கப்பட்ட ஆந்திரா ஸ்டீம் அரிசி (முதல் ரகம்) ரூ.1050

ஆகவும், ரூ.1000-க்கு விற்கப்பட்ட ஆந்திரா ஸ்டீம் அரிசி (இரண்டாவது ரகம்) ரூ.900

ஆகவும், ரூ.1250-க்கு விற்கப்பட்ட கர்நாடக ஸ்டீம் அரிசி (முதல் ரகம்) ரூ.1150

ஆகவும், ரூ.1100-க்கு விற்கப்பட்ட கர்நாடக ஸ்டீம் அரிசி (இரண்டாவது ரகம்) ரூ.1000

ஆகவும், ரூ.700-க்கு விற்கப்பட்ட இட்லி அரிசி ரூ.600 ஆகவும் குறைந்துள்ளது.

இந்த நிலையில் வரும் மாதங்களில் அரிசியின் விலை மேலும் சரியக்கூடும் என்று தமிழ்நாடு அனைத்து மளிகை வியாபாரிகள் சங்கத் தலைவர் எஸ்.பி.சொரூபன் தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *