பாரத பிரதமர் நரேந்திர மோடி சமீபத்தில் சீனா சென்றபோது கையெழுத்திட்ட பல முக்கிய ஒப்பந்தங்களில் ஒன்று ‘சகோதரி நகரம்’ ஒப்பந்தம். இந்த ஒப்பந்தத்தால் சீனாவில் உள்ள சாங்கிங் நகரமும், சென்னை நகரமும் சகோதரி நகரம் என்ற பெருமையை பெற்றுள்ளது. இதன் மூலம் இரு நகரங்களுக்கு இடையே கல்வி, கலாச்சாரம், உள்கட்ட மைப்பு மேலாண்மை தொழில்நுட்பம் போன்றவற்றை பரிமாறிக் கொள்ள முடியும்.

இந்த ஒப்பந்தத்தின் மூலம் சென்னை நகரின் உள்கட்டமைப்புகள், பொருளாதாரம் வளர வழி வகுக்கும் என்ற எதிர்பார்ப்பு சென்னை மக்களிடையே அதிகரித்து உள்ளது.

இதுகுறித்து சென்னை மாநகராட்சி அதிகாரிகள் செய்தியாளர்களிடம் கூறியபோது, ‘‘சாங்கிங் நகரின் உள்கட்டமைப்பு வசதிகள், ஆறுகள் பராமரிப்பு, திடக்கழிவு மேலாண்மை ஆகியவற்றின் தொழில்நுட்ப பரிமாற்றம் சென்னை மாநகருக்கு மிகவும் உதவியாக இருக்கும். அது தவிர கலாச்சார உறவுகளும் மேம்படுத்தப்படும்’’ என்று கூறினர்.

‘சகோதரி நகரங்கள்’ என்ற ஒப்பந்தம் இரு வேறு நாடுகளில் உள்ள இரு நகரங்கள் இடையே கலாச்சார, பொருளாதார உறவுகளை மேம்படுத்துவதற்காக போடப்படுகிறது. சென்னை மாநகராட்சி ஏற்கெனவே அமெரிக்காவின் சான் ஆன்டானியோ நகரத்துடன் ‘சகோதரி நகரமாக’ உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

சான் ஆன்டானியோவில் இருந்து கடந்த ஆண்டு கூடைப் பந்து வீரர்கள் சென்னைக்கு வந்து மாநகராட்சிப் பள்ளி மாணவர்களுக்கு கூடைப்பந்து பயிற்சி அளித்தார்கள் என்பது அனைவரும் அறிந்ததே.

English Summary: “Sisters City Deal” will give growth to Chennai City?