வீட்டுக்கு வீடு ஸ்மார்ட் டிவி (Smart TV) இருந்த காலம் மாறி, இப்போது வீட்டுக்கு வீடு ஒரு ப்ரொஜெக்டர் (Projector) என்ற கலாச்சாரம் இந்திய வீடுகளில் பெருகி வருகிறது.வெறும் ரூ. 10,000 கூட செலவில்லாமல் உங்கள் வீட்டிற்குள் ஒரு மினி தியேட்டரையே (mini home theater) நீங்கள் உருவாக்கலாம் என்று சொன்னால், யார் தான் ப்ரொஜெக்டர் சாதனங்களை வாங்காமல் இருப்பார்கள் என்று நீங்களே சொல்லுங்கள். 250″ இன்ச் வரை டிஸ்பிளேவை வழங்கும் அப்கிரேட் செய்யப்பட்ட புதிய ப்ரொஜெக்டர் சாதனத்தை பற்றி தான் இந்த பதிவில் பார்க்க போகிறோம்.
சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை எல்லோருக்கும் ஆடம்பரமான விஷயங்களில் இப்போது அதிக ஈர்ப்பு உருவாகியுள்ளது. வீட்டில் சிறிய டிஸ்பிளே டிவியை பயன்படுத்தும் பழக்கம் மாறி, இப்போது எல்லோரும் பெரிய திரையில் படம் பார்க்க ஆசைப்படுகிறார்கள். பெரிய டிஸ்பிளே என்று சொல்லும் போதே, கட்டாயம் ஒரு பெருந்தொகை கொடுத்து டிவி வாங்க வேண்டிய சூழ்நிலையில் தான் நாம் வாழ்ந்து வருகிறோம்.
250 இன்ச் TV-க்கு சவால்.. வீட்டுக்கு வீடு இனி இந்த Projector தான்:
ஆனால், அதிக செலவில்லாமல் வெறும் 10,000 ரூபாய் செலவிற்குள் 250 இன்ச் வரையிலான டிஸ்பிளே அனுபவத்தை நீங்கள் அனுபவிக்கலாம் என்று சொன்னால், கட்டாயம் உங்களிடம் இந்த ப்ரொஜெக்டர் சாதனம் மட்டும் இருந்தால் போதும். வசட்கோ (WZATCO) நிறுவனம் அறிமுகம் செய்த ஒரு அட்டகாசமான ப்ரொஜெக்டர் டிவைஸ் தான் வ்சட்கோ யுவா பிளஸ் (WZATCO Yuva Plus) என்ற ப்ரொஜெக்டர் மாடல்.
இந்த ப்ரொஜெக்டர் சாதனம் இதற்கு முன்பு 4500:1 கான்ட்ராஸ்ட் ரேட்ஸியோவுடன் (4500 : 1 Contrast Ratio), 420 ANSI ஆன் ஸ்கிரீன் பிரைட்னஸ், LTPS டிஸ்பிளே டெக்னாலஜி ( LTPS Display Technology) அம்சம், 6600 லுமென்ஸ் (6600 Lumens), 50000 மணி நேர லேம்ப் லைஃப் (50000 Hours Lamp Life) போன்ற அம்சங்களுடன் விற்பனைக்கு வந்தது.
வ்சட்கோ யுவா பிளஸ் அப்கிரேடட் ப்ரொஜெக்டர் (WZATCO Yuva Plus Upgraded Projector):
இப்போது இதே வ்சட்கோ யுவா பிளஸ் ப்ரொஜெக்டர் (WZATCO Yuva Plus Projector) சாதனத்தை நிறுவனம் இப்போது வ்சட்கோ யுவா பிளஸ் அப்கிரேடட் ப்ரொஜெக்டர் (WZATCO Yuva Plus Upgraded Projector) என்ற பெயருடன் மேம்படுத்தப்பட்ட மாடலாக விற்பனைக்கு கொண்டுவந்துள்ளது. இந்த புதிய அப்கிரேட் செய்யப்பட்ட வ்சட்கோ யுவா பிளஸ் (WZATCO Yuva Plus) ப்ரொஜெக்டர் சாதனம் 5000:1 டைனமிக் கான்ட்ராஸ்ட் ரேட்ஸியோவாக அப்கிரேட் செய்யப்பட்டுள்ளது.
இந்த புதிய அப்கிரேட் செய்யப்பட்ட ப்ரொஜெக்டர் சாதனம் 11700 லுமென்ஸ் பிரைட்னஸ் (Lumens) ஆதரவை கொண்டுள்ளது. இந்த புதிய Projector சாதனம் True 690 ANSI அம்சத்துடன் இயங்குகிறது. இதுதவிர மற்ற அம்சங்களிலும் சில நுணுக்கமான மேம்படுத்தல்களை நிறுவனம் மேற்கொண்டுள்ளது. இந்த சாதனம் 45″ இன்ச் டிஸ்பிளே அளவு முதல் துவங்கி 250″ இன்ச் டிஸ்பிளே அளவு வரை 4K தரத்தில் க்களை பார்க்க அனுமதிக்கிறது.
வ்சட்கோ யுவா பிளஸ் அப்கிரேடட் ப்ரொஜெக்டர் விலை (WZATCO Yuva Plus Upgraded Projector Price):
இதனுடனே, இன்பில்ட் ஆக 5W ஸ்டீரியோ ஸ்பீக்கர் (stereo speaker) அம்சமும் வழங்கப்பட்டுள்ளது. தனியாக ஹோம் தியேட்டர் சிஸ்டம்களையும் இத்துடன் நீங்கள் இணைத்துக்கொள்ளலாம். இந்த WZATCO Yuva Plus ப்ரொஜெக்டர் சாதனம் ஃபையர்ஸ்டிக் (Firestick) ஆதரவு, வயர்லெஸ் ஆண்ட்ராய்டு மற்றும் ஐபோன் ஸ்கிரீன் மிர்ரரிங் (Wireless Android and iPhone Screen Mirroring), போன்ற அம்சங்களை வழங்கும் பெஸ்ட் ப்ரொஜெக்டர் சாதனமாக திகழ்கிறது என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.
இந்த ப்ரொஜெக்டர் சாதனம் 2 HDMI போர்ட்டுடன் செட் டாப் பாக்ஸ் (Set Top Box), ஃபையர் டிவி ஸ்டிக் (Fire TV Stick), கம்ப்யூட்டர் மற்றும் லேப்டாப் (PC |Laptop), டிவிடி (DVD) மற்றும் பிளேஸ்டேஷன் (Play Station) சாதனங்களை கனெக்ட் செய்ய அனுமதிக்கிறது. இது 5W இன்பில்ட் ஹை-ஃபை கேவிட்டி ஸ்பீக்கரை ஆதரிக்கிறது. இது சவுண்ட்பார், ஹெட்ஃபோன்ஸ் போன்ற எக்ஸ்டர்னல் ஸ்பீக்கர்களுடன் இணைக்க 3.5 மிமீ ஆடியோ ஜாக் அம்சத்தையும் கொண்டுள்ளது.
இந்த புதிய WZATCO Yuva Plus Upgraded Projector சாதனத்தின் மீது 46% தள்ளுபடி அறிவிக்கப்பட்டுள்ளது.இந்த சலுகை பிளிப்காட் தளம் வழியாக வந்துள்ளது. இந்த ப்ரொஜெக்டரின் அசல் விலை ரூ.17,990 ஆகும். தற்போது கிடைக்கும் சிறப்பு சலுகைக்கு பிறகு, இது வெறும் ரூ. 9,690 என்ற விலையில் வாங்க கிடைக்கிறது.