passport8jan2016வெளிநாடு செல்வதற்கு தேவைப்படும் பாஸ்போர்ட்டுக்கள் எடுக்க தற்போது பல்வேறு எளிய வழிமுறைகளை பாஸ்போர்ட் அலுவலகம் செய்துள்ள நிலையில் மேலும் ஒரு புதிய வசதியாக சென்னை அருகே தாம்பரம் பகுதியில் உள்ள பாஸ்போர்ட் சேவா கேந்திராவில் சிறப்பு பாஸ்போர்ட் மேளா நடத்தப்பட உள்ளதாக பாஸ்போர்ட் அதிகாரி தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து, சென்னை மண்டல பாஸ்போர்ட் அதிகாரி கே.பாலமுருகன் வெளியட்டுள்ள செய்திக் குறிப்பு ஒன்று கூறியிருப்பதாவது:

பாஸ்போர்ட் கோரி விண்ணப்பிப்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதால் பாஸ்போர்ட் அலுவலகம் மற்றும் பாஸ்போர்ட் சேவா கேந்திரா மையங்களில் கூட்ட நெரிசலை குறைப்பதற்காக வரும் 19ஆம் தேதி சனிக்கிழமை சிறப்பு பாஸ்போர்ட் மேளா நடத்தப்படுகிறது. தாம்பரத்தில் உள்ள பாஸ்போர்ட் சேவா கேந்திராவில் நடைபெறும் இந்த சிறப்பு மேளாவில் 500 வரை பங்கேற்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும், இந்த மேளாவில் பங்கேற்க விண்ணப்பதாரர்கள் http://www.passportindia.gov.in/AppOnlineProject/welcomeLink என்ற இணையதளத்தில் சென்று பதிவு செய்து பதிவு செய்ய வேண்டும். பின்னர் விண்ணப்ப பதிவு எண் மற்றும் சான்றிதழ்களுடன் நேர்காணலுக்கு வரவேண்டும். மேலும், இந்த சிறப்பு மேளாவில் தத்கல் முறையில் விண்ணப்பிக்க அனுமதி கிடையாது. இவ்வாறு அந்த செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. புதியதாக பாஸ்போர்ட் எடுக்க விரும்பும் பொதுமக்கள் இந்த சிறப்பு பாஸ்போர்ட் மேளாவை பயன்படுத்திக் கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

English Summary: Special Passport Mela in Chennai Tambaram on March 19.