கத்தோலிக்க கிறிஸ்தவர்களின் புனித தலமாக கருதப்படும் வேளாங்கண்ணி மாதா கோவிலுக்கு வருடந்தோறும் புனித ஆரோக்கிய அன்னை ஆலய ஆண்டு திருவிழா நடைபெறுவது வழக்கம். இந்த திருவிழாவின் போது இந்தியாவின் பல பகுதிகளில் இருந்து பக்தர்கள் வேளாங்கன்னி ஆலயத்திற்கு வருகை தருவார்கள். தமிழகத்தின் பல பகுதிகளில் இருந்து இந்த கோவிலுக்கு நடைபயணமாக இந்த கோவிலுக்கு வந்து கொண்டிருக்கின்றனர். சென்னையில் இருந்து கூட பலர் நடைப்பயணம் செல்வதை நாம் நகரின் பல இடங்களில் பார்த்து வருகிறோம். இந்நிலையில் இத்திருவிழாவில் கலந்து கொள்ள இந்தியாவின் பல பகுதிகளில் இருந்தும் வரும் லட்சக்கணக்கான பக்தர்களின் வசதியை முன்னிட்டு ரயில்வே நிறுவனம் பல சிறப்பு ரயில்களை அறிவித்துள்ளது.

வரும் ஆகஸ்ட் மாதம் 26, 28 ஆகிய தேதிகளில் மும்பை லோகமான்ய திலக் ரெயில் நிலையத்தில் இருந்து வேளாங்கண்ணிக்கு சிறப்பு ரெயில்கள் செல்லவுள்ளதை நாம் ஏற்கனவே அறிவித்திருந்தோம். இந்நிலையில் வேளாங்கண்ணியில் இருந்து – கோவா வாஸ்கோடா காமா ரயில் முனையம் இடையே சிறப்பு ரயில்கள் இயக்கப்படுவதாக தெற்கு ரயில்வே நேற்று அறிவித்துள்ளது.

இது குறித்து தெற்கு ரெயில்வே நேற்று வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு ஒன்றில் கூறியிருப்பதாவது.

1. ரயில் எண் 02716 என்ற சிறப்பு ரயில் வரும் ஆகஸ்ட் 28 ஆம் தேதி வேளாங்கண்ணியில் இருந்து 8.15 மணிக்குப் புறப்பட்டு மறுநாள் இரவு 9.10 மணிக்கு கோவா சென்றடையும்.
2. ரயில் எண் 02718 என்ற சிறப்பு ரயில் வரும் ஆகஸ்ட் 31 ஆம் தேதி வேளாங்கண்ணியில் இருந்து 8.15 மணிக்குப் புறப்பட்டு மறுநாள் இரவு 9.10 மணிக்கு கோவா சென்றடையும்.
3. ரயில் எண் 02719 என்ற சிறப்பு ரயில் வரும் செப்டம்பர் 3 ஆம் தேதி வேளாங்கண்ணியில் இருந்து 8.15 மணிக்குப் புறப்பட்டு மறுநாள் இரவு 9.10 மணிக்கு கோவா சென்றடையும்.

இந்த ரயில்கள் நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர், திருச்சி, கரூர், ஈரோடு, திருப்பூர், கோவை, பாலக்காடு, சோரனூர், கோழிக்கோடு, கன்னூர், காஸர்கோடு, மங்களூர், சூரத்கல், உடுப்பி, குந்தாபூர், பாத்கல், கும்தா, கார்வார், மதகான் ஆகியரயில் நிலையங்களில் நின்று செல்லும். இந்த சிறப்பு ரயில்களை வேளாங்கன்னிக்கு வரும் பக்தர்கள் பயன்படுத்தி பயன் அடையுமாறு ரயில்வே துறை கேட்டுக்கொண்டுள்ளது.

English Summary : Southern railway announced special train between Velankanni – Goa.