நாட்டின் முன்னணி வங்கியான ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா, கடனுக்கான வட்டி விகிதத்தை 0.2 சதவீதம் உயர்த்தியுள்ளது. இதனால், வீடு, வாகனக் கடனுக்கான வட்டி விகிதம் உயர்கிறது.
ரிசர்வ் வங்கி கடனுக்களுக்கான அடிப்படை வட்டிவிகிதத்தை ஜூன் மாதத்தில் 0.25 சதவீதம் உயர்த்தியது. இதன் மூலம் அடிப்படை வட்டி விகிதம் 6.25 சதவீதமாக நிர்யணிக்கப்பட்டுள்ளது. இதை தொடர்ந்து ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா கடன்களுக்கான வட்டி விகிதத்தை 0.2 சதவீதம் உயர்த்தியுள்ளது. இந்த வட்டி உயர்வு இன்று முதல் அமலுக்கு வந்தது.
எம்எல்சிஆர் அடிப்படையிலான வட்டி விகிதம் நிர்ணயிக்கப்படும் நிலையில் ஒரு மாத எம்எல்சிஆர் அடிப்படையிலான வட்டி விகிதம் 7.9 சதவீதத்தில் இருந்து 8.1 சதவீதமக உயர்த்தப்பட்டள்ளது.
ஒராண்டிற்கான எம்எல்சிஆர் விகிதம் 8.25 சதவீதத்தில் இருந்து 8.45 சதவீதமாக உயர்த்தப்பட்டுள்ளது. அதேசமயம், மூன்றாண்டுகளுக்கான வட்டி விகிதம் 8.45 சதவீதத்தில் இருந்து 8.65 சதவீதமாக உயர்த்தப்பட்டுள்ளது.
எம்எல்சிஆர் அடிப்படையில் வட்டி
வங்கிகள் கொடுக்கும் டெபாசிட் வட்டி விகிதம், வாங்கும் கடனுக்கான வட்டி விகிதம் உள்ளிட்ட அனைத்தையும் சேர்த்து அடிப்படை வட்டி விகிதத்தை நிர்ணயம் செய்கின்றன. அதாவது சராசரியாக எவ்வளவு வட்டிக்கு வங்கிகள் கடன் வாங்குகின்றன என்பதை பொறுத்து அடிப்படை வட்டி விகிதம் நிர்ணயம் செய்யப்பட்டது.
இந்த முறையில் மாற்றம் செய்யப்பட்டது. இதன் அடிப்படையில் குறுகிய காலம் மட்டுமல்லாமல் ஒவ்வொரு கால அளவிலும் எந்தக் தொகையில் வங்கிகளுக்கு பணம் கிடைக்கிறது அதனை அடிப்படையாக வைத்து அடிப்படை வட்டி விகிதத்தை நிர்ணயம் செய்ய வங்கிகள் முடிவெடுத்தது. இதற்கு மார்ஜினல் காஸ்ட் ஆப் லெண்டிங் ரேட் (எம்சிஎல்ஆர்) என்று பெயர்.
முன்பு அடிப்படை வட்டி விகிதத்தில் இருந்து கூடுதலாக கடன்களுக்கான வட்டி நிர்ணயம் செய்யப்படும். இப்போது எம்சிஎல்ஆர். அடிப்படையில் கடன்களுக்கான வட்டி நிர்ணயம் செய்யப்படுகிறது