வயிற்று புண் என்பது மிகவும் பொதுவான நோயாகும்.

வயிற்று புண் என்பது ஒரு வெளிப்படையான காயத்துடன் வலியுடைய‌ புண்ணாகும்.

வயிற்று புண்கள் முன்சிறுகுடலான‌, வயிறு அல்லது சிறு குடல் மேல் பகுதியில் உருவாகின்றன.

உண்மையில் வயிற்று புண் என்பது மனிதனின் வயிற்றில் ஹைட்ரோ குளோரிக் அமிலம் மற்றும் பெப்சின் என்ற திரவம் சுரக்கப்படுகிறது.

நாம் உண்ணும் உணவானது குடலை அடைந்ததும் இந்த திரவங்களின் மூலமாக செரிக்க ஆரம்பிகிறது.

தினமும் காலையில் இந்த திரவமானது அதிகமாக சுரக்கிறது. காலை உணவை தவிர்த்தால் சுரக்கப்பட்ட அமிலமானது செரிமானத்திற்கு தேவையான உணவு இல்லாததால் குடலை அரிக்க ஆரம்பிக்கும். அதனால் குடல் மற்றும் வயிற்றில் புண்கள் ஏற்பட ஆரம்பிக்கும்.

இதனை எளிதில் போக்க வீட்டில் உள்ள எளிய பொருட்களைக் கொண்டே வயிற்றுப் புண்ணை விரட்டலாம்.

மாதுளை பழத்தோலை வெயிலில் காய வைத்து போடி செய்து கொள்ள வேண்டும். இரவில் உறங்குவதற்கு முன் ஒரு சிட்டிகை மாதுளைப் பொடியை எடுத்து வெந்நீரில் கலந்து குடித்து வந்தால் வயிற்று புண் ஆறும்.

வாரம் இருமுறை இலவங்கப் பட்டையை உணவில் சேர்த்துக் கொண்டால் வயிற்றுப்புண் மூலம் உண்டாகும் வயிற்று வலி நீங்கும்.

பாகற்காயின் விதைகளை அரைத்து பாலில் கலந்து குடித்தால் வயிற்றுப் புண்ணால் ஏற்படும் வயிற்று வலி நீங்கும்.

கொத்தமல்லியை உணவில் அதிகம் சேர்த்துக் கொண்டால் வயிற்றுப் புண் ஆறும்.

மணத்தக்காளி கீரையை சமைத்து சாப்பிட்டால் வயிற்றுப் புண் ஆறும்.

மிளகைப் போடி செய்து சலித்துக் கொள்ள வேண்டும். இதில் அரை ஸ்பூன் எடுத்துக் கொண்டு அதனுடன் தேன் கலந்து சாப்பிட வேண்டும்.இதன் மூலம் அல்சரை குணப் படுத்தலாம்.

அகத்திக் கீரையை வேக வைத்து பிழிந்து சாறு எடுத்துக் கொள்ள வேண்டும். இதில் தேன் கலந்து சாப்பிட்டு வர வயிற்றுப் புண் ஆறும்.

ஆலமரத்திலிருந்து பால் எடுத்துக் கொண்டு அதனுடன் தேன் கலந்து சாப்பிட்டு வர வயிற்றுக் கோளாறுகள் அனைத்தும் நீங்கும்.

வால்மிளகைப் போடி செய்து பாலுடன் கலந்து குடித்தால் வயிற்றுப்புண் ஆறும்.

சுக்குத் தூளை சிறிது எடுத்துக் கொண்டு அதை கரும்புச் சாருடன் கலந்து குடித்தால் வயிற்றுப்புண் ஆறும்.

வயிற்றுப்புண் ஆற பீட்ருட் கிழங்கை அரைத்து சாறு எடுத்து அதனுடன் சிறிது தேன் கலந்து குடித்து வந்தால் வயிற்று புண் விரைவில் குணமாகும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *