மத்திய அரசு வழங்கி வரும் சமையல் எரிவாயு சிலிண்டருக்கான மானியத்தொகையை வசதி படைத்தவர்கள் திரும்ப ஒப்படைக்க ஒரே ஒரு எஸ்.எம்.எஸ் அனுப்பினால் போதும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த ஜனவரி 1ஆம் தேதி முதல் ஆரம்பிக்கப்பட்ட சமையல் எரிவாயு சிலிண்டருக்கான மானியம் அவரவர வங்கிக்கணக்கில் வரவு வைக்கப்பட்டு வருகிறது. இதில் வசதி படைத்தவர்கள் தங்களுக்கு வழங்கப்படும் சமையல் எரிவாயு உருளைக்கான மானியத்தை திரும்ப ஒப்படைக்கும் வசதியும் அறிமுகப்படுத்தப்பட்டது.

சமையல் எரிவாயு சிலிண்டர் மானியத்தை ஒப்படைக்க விரும்பும் வாடிக்கையாளர்களுக்கு என www.givitup.in என்ற தனி இணையதளம் தொடங்கப்பட்டுள்ளதாகவும் இதன்மூலம் “இந்தியன் ஆயில்’, “பாரத் பெட்ரோலியம்’, “ஹிந்துஸ்தான் பெட்ரோலியம்’ ஆகிய 3 எண்ணெய் நிறுவன வாடிக்கையாளர்களும் தங்களது மானியத்தை ஒப்படைக்க வழிவகை செய்யப்பட்டுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இணையதளத்தைப் பயன்படுத்தாத வாடிக்கையாளர்களின் வசதிக்கு ஏற்ப எளிய முறையில் மானியத்தை ஒப்படைக்க புதியதாக எஸ்.எம்.எஸ். மூலம் மானியத்தை ஒப்படைக்கும் வசதி தற்போது அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதன்படி வாடிக்கையாளர்கள் “”GIVEITUP’ ‘ என்ற வார்த்தையை தங்களுக்கு சிலிண்டர் சப்ளை செய்யும் எண்ணெய் நிறுவனத்திடம் பதிவு செய்த செல்போன் எண்ணிலிருந்து டைப் செய்து எஸ்.எம்.எஸ். அனுப்ப வேண்டும். எஸ்.எம்.எஸ். அனுப்பிய வாடிக்கையாளர்களின் எண், 17 இலக்க குறியீட்டு எண், பெயர் ஆகிய விவரங்கள் வாடிக்கையாளரின் செல்போனுக்கு எஸ்.எம்.எஸ் அனுப்பப்படும்.

பின்னர், வாடிக்கையாளர் அந்த விவரங்களை சரிபார்த்து உறுதி செய்த பின்னர் Giveitup Yes” என டைப் செய்து தகவல் கிடைத்த 24 மணி நேரத்துக்குள் அனுப்ப வேண்டும். இதன்பின்னர் அவர்களது கோரிக்கை ஏற்கப்பட்டு, “Thank you’ என்ற பதில் தகவல் அனுப்பப்படும். அதன் பிறகு, வாடிக்கையாளர்களுக்கு மானியமில்லா விலையில் சமையல் எரிவாயு உருளைகளை பெற்றுக் கொள்ளலாம்.

எஸ்.எம்.எஸ். அனுப்ப வேண்டிய செல்போன் எண்கள்

இண்டேன்—–GIVEITUP—81307 92899

பாரத் கேஸ்—-GIVEITUP—77382 99899

ஹெச்.பி.——-GIVEITUP—97668 99899

English Summary : New way to pay Subsidy payments for Cooking gas.