புதுடெல்லி: ஏ.டி.எம். மெஷின்களில் ஸ்கிம்மர் உள்ளிட்ட கருவிகளைப் பொருத்தி அதன்மூலம் வாடிக்கையாளரின் வங்கி அட்டை விவரங்களைத் திருடி பணத்தை கொள்ளையடிப்பது தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இது தொடர்பாக வெளிநாட்டவர்கள் உள்ளிட்ட பலர் கைது செய்யப்பட்டுள்ளனர். நேற்று மேலும் இரண்டு வெளிநாட்டவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இதுபோன்ற மோசடி கும்பலிடம் இருந்து தங்கள் வாடிக்கையாளர்களை காப்பாற்றுவது குறித்து வங்கி நிர்வாகங்கள் ஆலோசனை மேற்கொண்டுவருகின்றன.

இந்நிலையில் வாடிக்கையாளர்களை பாதுகாக்கும் வகையிலும், டிஜிட்டல் மற்றும் பணமில்லா பரிவர்த்தனைகளை ஊக்குவிக்கும் வகையிலும் பாரத ஸ்டேட் வங்கி, ஏடிஎம் மூலம் பணம் எடுக்கும் வரம்பை பாதியாக குறைத்துள்ளது. ஒரு நாளைக்கு அதிகபட்சம் 40 ஆயிரம் ரூபாய் என்ற அளவில் தற்போது எடுக்க முடியும். இனி அதிகபட்சம் 20 ஆயிரம் ரூபாய் மட்டுமே எடுக்க முடியும். அதற்கு மேல் எடுக்க முடியாது. இந்த புதிய உத்தரவு இம்மாதம் 31-ம் தேதி முதல் நடைமுறைக்கு வர உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

இது தொடர்பாக பாரத ஸ்டேட் வங்கியின் அனைத்து கிளைகளிலும் அறிவிப்பு நோட்டீஸ் ஒட்டும்படி சுற்றறிக்கை அனுப்பப்பட்டிருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. பணம் எடுக்கும் வரம்பை குறைத்திருப்பதால் ஏராளமான வாடிக்கையாளர்கள் பாதிக்கப்படுவார்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *