இதன் மூலம் தமிழகம் முழுவதும் உள்ள மாநகராட்சி மேயர்களை இனி மாமன்ற உறுப்பினர்களே மறைமுக வாக்கெடுப்பு மூலம் தேர்வு செய்யப்படுவார்கள். இந்த புதிய சட்டத் திருத்தத்துக்கான முன்வடிவை, தமிழக சட்டமன்றத்தில் இன்று உள்ளாட்சித் துறை அமைச்சர் வேலுமணி தாக்கல் செய்தார். மாநகராட்சி மேயர் பதவிக்கும் தனித் தேர்தலை நடத்துவதை தவிர்க்கும் வகையில் செய்யப்பட்ட இந்த சட்ட திருத்தத்திற்கு ஆரம்ப நிலையிலேயே தி.மு.க. எதிர்ப்புத் தெரிவிப்பதாக சைதை தொகுதி எம்.எல்.ஏ. மா.சுப்ரமணியன் பேசினார். ஆனால், குரல் வாக்கெடுப்பு மூலம் சட்ட முன்வடிவைத் தாக்கல் செய்ய சபாநாயகர் தனபால் அனுமதித்தார்.
இதனையடுத்து சட்ட முன்வடிவு அவையில் தாக்கல் செய்யப்பட்டு, குரல் வாக்கெடுப்பு மூலம் நிறைவேறிது. இந்த சட்ட திருத்தத்துக்கு சட்டப்பேரவையில் நாளை ஒப்புதல் வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
English Summary: There is no longer mayor Election. Legislative amendments