metrorain1316சென்னையில் மெட்ரோ ரயில் திட்டம் இரண்டு வழித்தடங்களில் நிறைவேற்ற பணிகள் நடைபெற்று வரும் நிலையில்
முதல் கட்டமாக ஆலந்தூர் முதல் கோயம்பேடு வரையிலான 10 கிலோ மீட்டர் தூரத்திற்கு மெட்ரோ ரெயில் சேவை கடந்த ஆண்டு தொடங்கப்பட்டு வெற்றிகரமாக இயங்கி வருகிறாது. அதையடுத்து மற்ற பகுதிகளில் நடந்து வரும் மெட்ரோ ரயில் பணிகள் துரிதப்படுத்தப்பட்டு முழுவீச்சில் நடைப்பெற்று வருகின்றன.

இந்நிலையில் சின்னமலை முதல் விமான நிலையம் இடையிலான மெட்ரோ ரயில் பணிகள் இறுதி கட்டத்தை அடைந்துள்ளது. இதே போல திருமங்கலம் முதல் நேரு பூங்கா இடையேயான சுரங்கப்பாதை பணியும் விரைவுப்படுத்தப்பட்டுள்ளன. அங்கு சுரங்கப்பாதை அமைக்கப்பட்டு மற்ற பணிகள் நடந்து வருகின்றன. அக்டோபர் மாதம் இந்த வழித்தடத்தில் மெட்ரோ ரெயில் இயக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இது குறித்து நேற்று மெட்ரோ ரயில் அதிகாரிகள் செய்தியாளர்களிடம் கூறியபோது, “திருமங்கலம் முதல் நேரு பூங்கா இடையே சுரங்கப்பாதையில் அமைக்கும் பணி சமீபத்தில் நிறைவடைந்தன. தற்போது சிக்னல் மற்றம் மின்பாதை அமைக்கும் பணி நடந்து வருகிறது. விரைவில் அந்த பணி முடிய உள்ளது. அது முடிந்தவுடன் முதலில் சோதனை ஓட்டம் நடத்தப்படும். முடிவில் ரெயில் என்ஜின் மட்டும் சுரங்கபாதையில் இயக்கப்படும்.

அதன் பின்னர் பெட்டிகள் இணைத்து ரெயில் பரிசோதனை நடத்தப்படும். சுரங்கப்பாதைகளில் ரெயில் நிலையங்கள் அமைக்கும் பணி ஒரு புறம் வேகமாக நடந்து வருகிறது. எந்திரப்பிரிவு, மின்சாரம், குடிநீர் சப்ளை சம்பந்தமான பணிகள் நடக்கின்றன. எழும்பூர் வரை சுரங்கப் பாதையில் ரெயில் போக்குவரத்தை நீட்டிக்க விரும்பினாலும் அதற்கான வாய்ப்பு குறைவாகவே உள்ளது. ஏராளமான பணிகள் முழுமை அடையாமல் விடப்பட்டுள்ளது.

ஆனாலும் அக்டோபர் மாதத்தில் திருமங்கலம் முதல் நேருபூங்கா வரை சுரங்கப்பாதையில் மெட்ரோ ரெயில் இயக்கப்படும் என்று தெரிவித்தனர்.

English summary: Thirumangalam – Nerupunka Metro train running in October. Officials