railway1316பேருந்து பயணத்தைவிட ரயில் பயணம் பயணிகளுக்கு வசதியாக இருப்பதால் ரயிலில் பயணம் செய்பவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அதே நேரத்தில் ரயிலில் பயணம் செய்ய முன்கூட்டியே அதாவது சுமார் மூன்று மாதங்களுக்கு முன்பே திட்டமிட்டால்தான் பர்த் உள்பட வசதியான பயணம் கிடைக்கும்

ஒருசில நாட்களில் திடீரென திட்டமிட்டு பயணம் செய்பவர்களுக்கு காத்திருப்போர் பட்டியல் டிக்கெட் தான் கிடைக்கும். காத்திருப்போர்களின் எண்ணிக்கையை பொறுத்து இடம் கிடைக்க வாய்ப்பு உள்ளது. ஆனால் அரசு உயர் அதிகாரிகள், அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள், நீதிபதிகள் போன்ற வி.ஐ.பி.க்கள் எந்நேரமும் பயணம் செய்ய வசதியாக ‘‘எமர்ஜென்சி கோட்டா’’ வழங்கப்பட்டு வருகிறது. ரெயில்வே துறையால் வழங்கப்படும் இந்த சலுகைக்கான விண்ணப்பத்தை பூர்த்தி செய்து கொடுத்தால் ரெயிலில் படுக்கை வசதி மற்றும் இருக்கை வசதி உறுதியாக கிடைக்கும்.

ஆனால் இந்த எமர்ஜென்ஸி கோட்டைவை விஐபிக்கள் தவிர சாதாரண மக்கள் பயன்படுத்த முடியாத நிலை இதுவரை இருந்தது. ஆனால் தற்போது சாமானிய மக்களும் அவசர ஒதுக்கீட்டை பயன்படுத்த கூடிய வசதியை ரெயில்வே துறை அறிவித்துள்ளது.

பொதுமக்கள் பயணம் செய்வதற்கு 2 நாட்களுக்கு முன்பாக இந்த வசதி வேண்டி ஒரு கடிதத்தை வணிக துறை அதிகாரியிடம் சமர்பித்தால் போதும். பேறுகால பெண்கள், கடுமையாக உடல்நலம் பாதிக்கப்பட்டு அவசர பயணம் மேற்கொள்வார் போன்ற மருத்துவ சிகிச்சைக்காக செல்லக்கூடியவர்கள், போட்டித் தேர்வில் பங்கேற்க கூடிய மாணவர்கள், பட்டதாரிகள், வேலை வாய்ப்புக்கான நேர்காணலுக்கு செல்லக் கூடியவர்கள் போன்ற அவசர பயணம் மேற்கொள்ளக் கூடியவர்கள் அவர்களுக்கான முக்கிய காரணத்தை தெளிவாக விளக்கி, அதற்கான சான்றிதழையும் இணைத்து அந்தந்த கோட்டத்தில் உள்ள ரெயில்வே வணிக பிரிவில் சமர்ப்பிக்க வேண்டும்.

பொது மக்கள் கொடுக்கும் படிவத்தினை ஆய்வு செய்து குறிப்பிட்டுள்ள காரணம் உண்மைதானா என ஆராய்ந்து பயணம் செய்ய இடவசதியை அளிக்கும். எனவே இதுவரையில் வி.ஐ.பி.களுக்கு மட்டும் வழங்கப்பட்ட இந்த சலுகை பொது மக்களுக்கும் விரிவாக்கம் செய்யப்பட்டுள்ளது.

மேலும் மூத்த குடிமக்கள், கர்ப்பிணி பெண்களுக்கு மேல்படுக்கை வசதி ஒதுக்கப்பட்டு இருக்கும் பட்சத்தில் அதனை மாற்றி கீழ் படுக்கை வசதி அளிக்க வகை செய்யும் படிவத்தினை பூர்த்தி செய்து கொடுத்தாலும் அவர்களுக்கு கீழ் படுக்கை வசதி அளிக்கப்படுகிறது.

இது குறித்து ரெயில்வே அதிகாரி ஒருவர் கூறுகையில், பொது மக்களுக்கு வழங்கப்படும் இந்த சலுகையை முறையாக பயன்படுத்த வேண்டும். மருத்துவத்திற்கு அதிக முன்னுரிமை கொடுக்கப்படும். அனைத்து எமர்ஜென்சி ஒதுக்கீட்டு கடிதங்களை சரி பார்த்து இதில் அதிக முக்கியத்துவம் உள்ளவற்றிக்கு இடம் ஒதுக்கீடு செய்யப்படும் என்று கூறினார்

English summary: VIP Kota ordinary people as well as an emergency. Notice Railways