இந்த ஆண்டுக்கான நீட் தேர்வுக்கு மே 6-ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என முதலில் தெரிவிக்கப்பட்டது. அதனைத்தொடர்ந்து, மே, 15-ஆம் தேதி வரை விண்ணப்பிக்கக் கால அவகாசம் வழங்கப்பட்டது. அதனைத்தொடர்ந்தும் நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்கக் கால அவகாசம் நீட்டிக்கப்பட்டது. அதன்படி, மே- 20-ஆம் தேதிக்குள்ளாக விண்ணப்பிக்கலாம் என்றும் அறிவிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில், நீட் தேர்வுக்கு விண்ணப்பித்திருந்தவர்கள், தங்கள் விண்ணப்பங்களில் ஏதும் திருத்தம் இருப்பின் இன்று இரவுக்குள் https://neet.nta.nic.in என்ற இணையதளத்தில் திருத்தம் மேற்கொள்ளலாம் எனத் தேசிய தேர்வு முகமை அறிவித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *