AirHostess23216விமானத்தில் பயணிகளுக்கு தேவையானவற்றை கவனித்து கொள்ள ஏர்ஹோஸ்ட்ரஸ் என்னும் விமானப் பணிகள் சேவை செய்து வருவதை போல் விரைவில் எக்ஸ்பிரஸ் ரயில்களில் பணிப் பெண்கள் அறிமுகப்படுத்தப்படும் என ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது.

டெல்லி மற்றும் ஆக்ரா நகரங்களுக்கு இடையே மணிக்கு 160 கி.மீட்டர் வேகத்தில் செல்லும் ‘கேட்டிமேன் எக்ஸ்பிரஸ்’ சொகுசு ரயில் விரைவில் அறிமுகப்படுத்த ரயில்வே நிர்வாகம் முடிவு செய்துள்ளது. விமானங்களைப் போன்று அந்த எக்ஸ்பிரஸில், ரயில் பணிப்பெண்கள் நியமிக்கப்பட உள்ளனர்.

இனிமையான மெல்லிய இசைப் பின்னணியில் கையில் ரோஜா மலருடன் ரயில் பயணிகளை அந்த பணிப்பெண்கள் வரவேற்பார்கள் என்றும் விரைவில் ரயில் பணிபெண்களை தேர்வு செய்யும் அறிவிப்பு வெளியாகும் என்றும் ரயில்வே உயரதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மேலும் ரயிலில் தொலைக்காட்சி வசதி மற்றும் அறுசுவை உணவு வகைகள் பரிமாறப்படும். சதாப்தி எக்ஸ்பிரஸ் ரயிலை விட கேட்டிமேன் எக்ஸ்பிரஸ் கட்டணம் 25 சதவீதம் கூடுதலாக இருக்கும்.

டெல்லி-ஆக்ராவை தொடர்ந்து சென்னை-ஹைதராபாத், டெல்லி-கான்பூர், டெல்லி-சண்டிகர், நாக்பூர்-பிலாஸ்பூர், கோவா- மும்பை, நாக்பூர்-செகந்திராபாத் ஆகிய வழித்தடங்களில் கேட்டி மேன் எக்ஸ்பிரஸை இயக்க ரயில்வே நிர்வாகம் திட்ட மிட்டுள்ளது.

English Summary: Trains hostesses like air hostesses.