அமெரிக்க அதிபர் ஒபாமாவின் பதவிக்காலம் முடிவடைய உள்ளதை அடுத்து வரும் நவம்பரில் அங்கு அதிபர் தேர்தல் நடைபெறவுள்ளது. இந்த தேர்தலில் ஜனநாயகக் கட்சியின் சார்பில் முன்னாள் ஜனாதிபதி பில் கிளிண்டன் மனைவியும் முன்னாள் பாதுகாப்பு அமைச்சருமான ஹிலாரி கிளிண்டன் போட்டியிடுகிறார். அவரை எதிர்த்து குடியரசு கட்சியின் சார்பில் டொனால்ட் டிரம்ப் போட்டியிடுகின்றார். இருவருக்கும் இடையே போட்டி கடுமையாக இருப்பதாக கூறப்படினும் ஹிலாரி கிளிண்டன் வெற்றி பெற அதிக வாய்ப்பு இருப்பதாக கருத்துக்கணிப்புகள் தெரிவித்துள்ளன.
இந்நிலையில் தமிழக முதல்வர் ஜெயலலிதா ஹிலாரி கிளிண்டன் அமெரிக்க அதிபர் தேர்தலில் வெற்றி பெற தனது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள அறிக்கை ஒன்றில் கூறியிருப்பதாவது, “அமெரிக்கா அதிபர் தேர்தலில் போட்டியிடும் ஹிலாரிக்கு வாழ்த்துக்கள். உலகில் உள்ள பெண்கள் அனைவருக்கும் இது பெருமை மிகுந்த தருணம். அதிபர் தேர்தலில் போடிட்யிடுவதன் மூலம் பெண்களின் முன்னேற்றத்திற்கு நம்பிக்கையும், குரலையும் அளித்துள்ளார்’ என்று ஜெயலலிதா தெரிவித்துள்ளார்.
கடந்த 2011ஆம் ஆண்டு அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சராக இருந்த ஹிலாரி கிளிண்டன் இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் செய்தார். அப்போது சென்னை கோட்டையில் முதல்வர் ஜெயலலிதாவை நேரில் சந்தித்து சுமார் ஒரு மணி நேரம் பேச்சுவார்த்தை நடத்தினார் என்பது குறிப்பிடத்தக்கது.
English Summary: US presidential candidate Hillary Clinton congratulates Jayalalitha.