கடந்த 1959ஆம் ஆண்டு வெளிவந்த ‘வீரபாண்டிய கட்டபொம்மன்’ திரைப்படம் அந்த காலத்திலேயே பெரும் வசூலை குவித்து சாதனை செய்த திரைப்படம். சிவாஜி கனேசன், ஜெமினி கணேசன், பத்மினி, வரலட்சுமி மற்றும் பலர் நடித்த இந்த திரைப்படத்தை பி.ஆர்.பந்தலு பிரமாண்டமாக தயாரித்து இயக்கியிருந்தார். ஆசிய, ஆப்பிரிக்க நாடுகளின் சிறந்த நடிகர் என்ற விருதை சிவாஜி கணேசனுக்கு பெற்று தந்த இந்த திரைப்படம் தற்போது டிஜிட்டல் தொழில்நுட்பத்தில் விரைவில் ரிலீஸாக உள்ளது.
சாய்கணேஷ் பிலிம்ஸ் பி.ஸ்ரீனிவாசலு இந்த படத்தை டிஜிட்டலில் மெருகேற்றி ரிலீஸ் செய்யவுள்ளார். இந்த படத்தின் டிஜிட்டல் டிரைலர் சமீபத்தில் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்றது. இந்நிலையில் இப்படத்தின் வெளிநாட்டு வெளியீட்டு உரிமையை மலேசிய வாழ் தமிழர் மலேசியா பாண்டியன் SPV AV INTERNATIONAL சார்பில் பெற்றுள்ளார். மலேசியா, சிங்கப்பூர் உள்பட பல வெளிநாடுகளிலும் அவர் இந்த படத்தை பெருவாரியான தியேட்டர்களில் ரிலீஸ் செய்ய முடிவு செய்திருப்பதாக கூறப்படுகிறது.
இந்த படத்தின் டிஜிட்டல் பணிகளுக்காக ஒன்பது மாதங்கள் ஆகியது என்றும், வெள்ளையனை எதிர்த்து போராடிய ஒரு வீரனின் வரலாற்றை இளையதலைமுறையினர்கள் தெரிந்து கொள்ள வேண்டும் என்ற எண்ணத்தின் அடிப்படையில் இந்த படம் டிஜிட்டலுக்கு மாற்றப்பட்டதாகவும் சாய்கணேஷ் பிலிம்ஸ் பி.ஸ்ரீனிவாசலு கூறியுள்ளார்.
English Summary : SPV AV INTERNATIONAL gets the foreign publication rights for “Veerapandya Kattabomman” film.