இளையதளபதி விஜய் நடித்து ‘புலி’ படம் அக்டோபர் 1ஆம் தேதி ரிலீசாகவுள்ள நிலையில் அவருடைய அடுத்த படமான ‘விஜய் 59’ படத்தின் படப்பிடிப்பு தற்போது சென்னையில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் சென்னை படப்பிடிப்பு இன்னும் ஒருசில நாட்களில் நிறைவு பெறும் என்றும், அடுத்தகட்ட படப்பிடிப்பிற்காக விஜய், சமந்தா, எமிஜாக்சன் உள்பட படக்குழுவினர் அனைவரும் கோவா செல்லவுள்ளதாகவும், அதனையடுத்து இன்னும் ஓரிரு மாதங்களில் ‘விஜய் 59’ படக்குழுவினர் சீனா செல்லவுள்ளதாகவும் கூறப்படுகிறது.

இந்நிலையில் இந்த திரைப்படம் கடந்த 1990ஆம் ஆண்டு மணிரத்னம் தயாரிப்பில் அவருடைய நண்பர் கே.சுபாஷ் இயக்கத்தில் கேப்டன் விஜயகாந்த் நடித்த ‘சத்ரியன்’ படத்தின் கதையை தழுவி எடுக்கப்பட்டு வருவதாக கடந்த இரண்டு நாட்களாக ஒருசில ஊடகங்களில் செய்திகள் வெளிவந்து கொண்டிருந்தது. இதுகுறித்து இயக்குனர் அட்லி தற்போது விளக்கம் அளித்து முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.

இதுகுறித்து விளக்கம் அளித்துள்ள அட்லி, ‘விஜய் 59’ திரைப்படம் விஜயகாந்த் நடித்த ‘சத்ரியன்’ படத்தின் தழுவல் என்ற செய்தி வெறும் வதந்தியே’. விஜய் 59′ படத்தின் கதைக்கும், சத்ரியன் படத்தின் கதைக்கும் எவ்வித சம்பந்தமும் இல்லை’ என்று தெரிவித்துள்ளார். ‘விஜய் 59’ படக்குழுவினர்களும் அட்லியின் கருத்தை உறுதிப்படுத்தியுள்ளனர். எனவே கடந்த இரண்டு நாட்களாக ‘விஜய் 59’ குறித்து எழுந்த வதந்திக்கு ஒருவழியாக முற்றுப்புள்ளி வைக்கப்பட்டது.

English Summary : Atlee explains that Vijay 59 is not based on Sathriyan film.