எம்.பி.ஏ, எம்.சி.ஏ மற்றும் எம்.இ, எம்.டெக் ஆகிய படிப்புகளில் சேர்வதற்கான ‘டான்செட்’ எனப்படும் தமிழ்நாடு பொது நுழைவுத்தேர்வு அண்ணா பல்கலைக்கழகத்தால் வருடந்தோறும் நடத்தப்பட்டு வருகிறது. நடப்பு கல்வி ஆண்டு மாணவர் சேர்க்கைக்கான டான்செட் நுழைவுத்தேர்வு ஜுன் 11 மற்றும் 12 ஆகிய தேதிகளில் நடைபெற்றது. எம்.பி.ஏ, எம்.சி.ஏ நுழைவுத்தேர்வு 11-ம் தேதி நடந்தது. இந்த தேர்வை சுமார் 22 ஆயிரம் பேர் எழுதினர். எம்.இ, எம்.டெக், எம்.ஆர்க், எம்.பிளான். படிப்புகளுக்கான டான்செட் தேர்வு 12ஆம் தேதி நடைபெற்றது. இந்த தேர்வை 17 ஆயிரம் பேர் எழுதினார்கள்.
இந்த தேர்வுகளின் முடிவுகள் எப்போது வெளியாகும் என மாணவர்கள் ஆர்வத்தோடு காத்திருந்த நிலையில் இந்த தேர்வு முடிவு குறித்து டான்செட் செயலாளரும், அண்ணா பல்கலைக்கழக நுழைவுத் தேர்வுகள் இயக்குநருமான பேராசிரியை பி.மல்லிகா இதுகுறித்து விளக்கம் அளித்துள்ளார். “டான்செட் தேர்வு வினாத்தாள்களை மதிப்பீடு செய்யும் பணி நடைபெற்று வருவதாகவும் தேர்வு முடிவுகள் இன்னும் ஒரு வாரத்தில் வெளியிடப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.
டான்செட் தேர்வெழுதிய மாணவர்கள் வெவ்வேறு படிப்புகளில் சேர தனியாக விண்ணப்பிக்க வேண்டும். அந்த வகையில், எம்.பி.ஏ, எம்.சி.ஏ படிப்புகளுக்கு ஜூலை 4 முதல் 15-ம் தேதி வரை ஆன்லைனில் www.gct.ac.in என்ற இணையதளத்தின் மூலம் விண்ணப்பிக்கலாம் என்று தொழில்நுட்பக்கல்வித்துறை அறிவித்துள்ளது.
English Summary:When tancet results? Tancet Secretary announced