புதுவையை சேர்ந்த பிரபல எழுத்தாளர் பிரபஞ்சன். இவர் 100-க்கும் மேற்பட்ட நாவல்கள் எழுதியுள்ளார். சாகித்ய அகாடமி விருது பெற்றுள்ளார்.

கடந்த 1 ஆண்டுகளுக்கு முன்பு இவர் புற்றுநோயால் பாதிக்கப்பட்டார். கடந்த 6 மாதங்களுக்கு முன்பு புதுவை மதகடிப்பட்டில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு 2 மாதகாலம் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. இதில் அவரது உடல்நலத்தில் முன்னேற்றம் ஏற்பட்டது. பின்னர் அவர் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டார்.

இந்நிலையில் கடந்த மாதம் 15-ந் தேதி அவருக்கு மீண்டும் உடல்நலம் பாதிக்கப்பட்டது. தொடர்ந்து அவர் மதகடிப்பட்டில் உள்ள அதே தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு டாக்டர்கள் தொடர்ந்து தீவிர சிகிச்சை அளித்தனர்.

இந்நிலையில் சிகிச்சை பலனின்றி பிரபஞ்சன் இன்று காலமானார்.

எழுத்தாளர் பிரபஞ்சன் புதுவை அரசின் சிறந்த எழுத்தாளருக்கான விருது பெற்றுள்ளார். மேலும் தமிழக அரசின் சிறந்த எழுத்தாளர்களுக்கான விருதையும் பெற்றுள்ளார். இவருக்கு வயது 73. அவரது மறைவுக்கு தமிழறிஞர்கள், எழுத்தாளர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *