உலக பாட்மிண்டனில்  சாய்னா, ஸ்ரீகாந்த் அசத்தல்:

உலக பாட்மிண்டன் சாம்பியன்ஷிப் தொடரில் இந்தியாவின் சாய்னா நெவால், கிடாம்பி ஸ்ரீகாந்த் ஆகி யோர் அடுத்த சுற்றுக்கு முன் னேறினர்.

சீனாவின் நான்ஜிங் நகரில் நடைபெற்று வரும் இந்தத் தொடரில் ஆடவருக்கான ஒற்றை யர் பிரிவு முதல் சுற்றில் 5-ம் நிலை வீரரான இந்தியாவின் கிடாம்பி ஸ்ரீகாந்த் 21 15, 21 16 என்ற நேர் செட்டில் 87-ம் நிலை வீரரான அயர்லாந்தின் ஹட் குயனை வீழ்த்தினார். இந்த ஆட்டம் 37 நிமிடங்களில் முடிவடைந்தது. ஸ்ரீகாந்த் 2-வது சுற்றில் ஸ்பெயினின் பேப்லோ அபியனை எதிர்த்து விளையாடுகிறார். மற்றொரு ஆட்டத்தில் 4-ம் நிலை வீரரான கொரியாவின் சன் வான் ஹோவை எதிர்த்து இந்தியாவின் சாய் பிரணீத் விளையாட இருந்தார். ஆனால் கடைசி நேரத்தில் சன் வான் ஹோ போட்டியில் இருந்து விலகியதால் சாய் பிரணீத் அடுத்த சுற்றுக்கு முன்னேறியதாக அறிவிக்கப்பட்டது.

மகளிர் ஒற்றையர் பிரிவு 2-வது சுற்றில் 10-ம் நிலை வீராங்கனையான இந்தியாவின் சாய்னா நெவால், 72-ம் நிலை வீராங்கனையான துருக்கியின் டெமிர்பாக்கை எதிர்த்து விளையாடினார். 39 நிமிடங்கள் நடைபெற்ற இந்த ஆட்டத்தில் சாய்னா 21-17, 21-18 என்ற நேர் செட்டில் வெற்றி பெற்று 3-வது சுற்றுக்கு முன்னேறினார். இந்த சுற்றில் சாய்னா, 4- ம் நிலை வீராங்கனையான இந்தோனேஷியாவின் ரட்சனோக் இன்டனானை எதிர்கொள்கிறார். ரட்சனோக் தனது 2-வது சுற்றில் 16-21, 22-20, 21-10 என்ற செட் கணக்கில் டென்மார்க்கின் மியாவை வீழ்த்தினார். இந்த ஆட்டம் ஒரு மணி நேரம் 16 நிமிடங்கள் நடைபெற்றது.

கலப்பு இரட்டையர் பிரிவில் இந்தியாவின் சவுரப் சர்மா, அனுஷ்கா பாரிக் ஜோடி 18-21, 11-21 என்ற நேர் செட்டில் மலேசியாவின் ஷான் பெங் சூன், கோஹ் லியு யிங் ஜோடியிடம் தோல்வியடைந்தது. அதேவேளையில் மற்றொரு இந்திய ஜோடியான சாட்விக் சாய் ராஜ் ராங்கி ரெட்டி, அஸ்வினி பொன்னப்பா ஜோடி 10-21, 21-17, 21-18 என்ற செட் கணக்கில் ஜெர்மனியின் மார்க் லம்ஸ், இஸபெல் ஹர்ட்டிரிச் ஜோடியை வீழ்த்தியது.

மகளிர் இரட்டையர் பிரிவில் இந்தியாவின் குஹூ கார்க், ஹஸரிகா ஜோடி 19-21, 11-21 என்ற நேர் செட்டில் தைவானின் ஷாங் ஷிங் ஹூய், யங் ஷிங் டுன் ஜோடியிடம் வீழ்ந்தது. மற்றொரு ஆட்டத்தில் இந்தியாவின் அஸ்வினி பொன்னப்பா, ஷிக்கி ரெட்டி ஜோடி 19-21, 21-10, 21-17 என்ற செட் கணக்கில் தைவானின் ஷியாங் ஹைய் ஷின், ஹங் ஷி ஹன் ஜோடியை வீழ்த்தியது.

ஆடவர் இரட்டையர் பிரிவு 2-வது சுற்றில் இந்தியாவின் சாட்விக் சாய் ராஜ் ராங்கி ரெட்டி, ஷிராக் ஷெட்டி ஜோடி 21-19, 12-21, 21-19 என்ற செட் கணக்கில் சுமார் ஒரு மணி நேரம் 20 நிமிடங்கள் போராடி இங்கிலாந்தின் மார்கஸ் எலிஸ், கிறிஸ் லாங்ரிட்ஜ் ஜோடியை வீழ்த்தியது. அதேவேளையில் மற்றொரு ஆட்டத்தில் இந்தியாவின் கோனா தருண், சவுரப் சர்மா ஜோடி 20-22, 21-18, 17-21 என்ற செட் கணக்கில் சீனாவின் ஷின் சுங், டங் சுன் மான் ஜோடியிடம் தோல்வி கண்டது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *