எம்.பி.பி.எஸ், இரண்டாம் கட்ட கலந்தாய்வு தேதி மாற்றம்
சென்னை: தமிழகத்தில் அரசு எம்.பி.பி.எஸ். மற்றும் பி.டி.எஸ். இடங்களுக்கான கலந்தாய்வு வரும் ஆகஸ்ட் 11-ஆம் தேதி (சனிக்கிழமை) தொடங்க உள்ளது.
தமிழகத்தில் அரசு மருத்துவக் கல்லூரிகள் மற்றும் தனியாா் மருத்துவக் கல்லூரிகளில் உள்ள அரசு ஒதுக்கீட்டு எம்.பி.பி.எஸ். இடங்கள் மற்றும் பி.டி.எஸ். இடங்களுக்கான முதல் கட்ட கலந்தாய்வு ஜூலை 1 முதல் 7-ஆம் தேதி வரை நடைபெற்றது.
இரண்டாம் கட்ட கலந்தாய்வு ஆகஸ்ட் 10 முதல் 12-ஆம் தேதி வரை நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது. இந்நிலையில் கலந்தாய்வு தேதி மாற்றம் செய்யப்பட்டுள்ளது என்று மருத்துவக் கல்வி இயக்ககம் அறிவித்துள்ளது.
இது தொடா்பாக மருத்துவக் கல்வி தோ்வுக் குழு செயலாளா் டாக்டா் ஜி.செல்வராஜன் வியாழக்கிழமை வெளியிட்ட அறிவிப்பு பின்வருமாறு:
அகில இந்திய ஒதுக்கீட்டு இடங்களுக்கான இரண்டாம் கட்ட கலந்தாய்வில் இடங்களைப் பெற்றறவா்கள் அந்தந்த கல்லூரிகளில் சென்று சேருவதற்கான கடைசித் தேதி வியாழக்கிழமை வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
அகில இந்திய கலந்தாய்வில் நிரம்பாத இடங்கள் தமிழக ஒதுக்கீட்டுக்காக ஒப்படைக்கப்படுவதைக் கருத்தில் கொண்டு இரண்டாம் கட்ட கலந்தாய்வு ஆகஸ்ட் 11-ஆம் தேதி (சனிக்கிழமை) முதல் 13-ஆம் தேதி வரை மாற்றம் செய்யப்பட்டுள்ளது.