சென்னை பெருநகரக் காவல் துறையில் நிர்வாக வசதிக்காகவும், விருப்பத்தின் அடிப்படையிலும், பணியில் ஒழுங்கீனம் ஆகியவற்றின் அடிப்படையிலும் 19 காவல் ஆய்வாளர்களை பணியிட மாற்றம் செய்ய நேற்று முன் தினம் காவல் ஆணையர் எஸ்.ஜார்ஜ் உத்தரவிட்டிருந்தார். இந்நிலையில் நேற்று 13 காவல் துணைக் கண்காணிப்பாளர்களை பணியிட மாற்றம் செய்து, டி.ஜி.பி. அசோக்குமார் உத்தரவிட்டுள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளது.
இது குறித்து காவல்துறை வட்டார செய்திக்குறிப்பு ஒன்று கூறுவதாவது: தமிழக காவல் துறையில் நிர்வாக வசதிக்காக 13 காவல் துணைக் கண்காணிப்பாளர்களை பணியிட மாற்றம் செய்து, சட்டம்-ஒழுங்கு டி.ஜி.பி. அசோக்குமார் வெள்ளிக்கிழமை உத்தரவிட்டார்.
இதில், சென்னை ஒருங்கிணைந்த குற்றப்புலனாய்வு பிரிவில் பணியாற்றிய ஏ.செல்வராஜு சென்னை உளவுப் பிரிவு தலைமையிடத்துக்கும்,அரக்கோணம் ஏ.கண்ணப்பன் காஞ்சிபுரம் மது விலக்கு அமலாக்கப் பிரிவுக்கும், விருதுநகர் சி.டி.சக்கரவர்த்தி காஞ்சிபுரம் மாவட்டம் மாமல்லபுரத்துக்கும் என, மொத்தம் 13 காவல் துணை கண்காணிப்பாளர்கள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். இவர்கள், ஓரிரு நாள்களில் புதிய பணியை ஏற்பார்கள் என காவல் துறை வட்டாரங்கள் தெரிவித்தன.
English Summary : After 19 inspectors transferred from Chennai now 13 DSP has been transferred from Chennai.