inspectors2862016சென்னை நுங்கம்பாக்கம் சுவாதி கொலை உள்பட கடந்த சில நாட்களாக கொலை சம்பவங்களின் எண்ணிக்கைகள் அதிகரித்து வருவதை அடுத்து காவல்துறையில் சில அதிரடி மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. முதல்கட்டமாக சென்னையில் 16 இன்ஸ்பெக்டர்கள் அதிரடியாக இட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

இது குறித்து சென்னை போலீஸ் கமிஷனர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு ஒன்றில் கூறப்பட்டிருப்பதாவது:

பழைய பதவி அடைக்குறிப்புக்குள் கொடுக்கப்பட்டுள்ளது.

1. ஆர்.கே. நகர் சட்டம் ஒழுங்கு இன்ஸ்பெக்டராக வீரகுமார் (மத்திய குற்றப்பிரிவு )
2. தண்டையார் பேட்டை சட்டம் ஒழுங்கு இன்ஸ்பெக்டராக பாலகிருஷ்ணபிரபு ( போர்சோர் எஸ்டேட் ),
3. வண்ணாரபேட்டை இன்ஸ்பெக்டராக ஜவஹர் ( திருவான்மியூர் சட்டம் ஒழுங்கு ),
4. கொருக்கு பேட்டை சட்டம் ஒழுங்கு இன்ஸ்பெக்டராக அமல் ஸ்டான்லி ( மாதவரம் குற்றப்பிரிவு ),
5. ராயபுரம் சட்டம் ஒழுங்கு இன்ஸபெக்டராக மோகன்ராஜ் ( துறைமுகம் ),
6. காசிமேடு சட்டம் ஒழுங்கு இன்ஸ்பெக்டராக ஆபிரகாம் கிரஸ் துரைராஜ் (மத்திய குற்றப்பிரிவு ),
7. மீன்பிடி துறைமுகம் இன்ஸ்பெக்டராக சரவணன்பிரபு (மதுவிலக்கு அண்ணாநகர் ),
8. கொடுங்கையூர் சட்டம் ஒழுங்கு இன்ஸ்பெக்டராக ரத்தினவேல் பாண்டியன் ( மத்திய குற்றப்பிரிவு ),

மேலும் கீழே வரும் 8பேரும் கன்ட்ரோல் ரூமுக்கு மாற்றப்பட்டுள்ளனர். இவர்கள் தற்போது வகித்த பதவி மட்டும் அடைக்குறிப்புக்குள் தரப்பட்டுள்ளது .

9. செல்லப்பா (ஆர்.கே.நகர் சட்டம் ஒழுங்கு ),
10.அசோகன் (தண்டையார்பேட் ),
11.காசியப்பன் (வண்ணாரபேட்டை சட்டம் ஒழுங்கு ),
12.ஜானகிராமன் (கொருக்குபேட் ),
13.ரகுபதி ( ராயபுரம் ),
14.வெங்கடேசன் (காசிமேடு ),
15.கண்ணன் (மீன்பிடி துறைமுகம் ),
16.செல்வகுமார் ( கொடுங்கையூர்).

இவ்வாறு உத்தரவில் கூறப்பட்டுள்ளது.

English Summary: 16 Inspectors transfer from Chennai