பெங்களூர் நகரை தலைமையிடமாக கொண்டு செயல்படும் இந்திய அறிவியல் மையம், GATE என்று அழைக்கப்படும் Graduate Aptitude Test in Engineering என்ற தேர்வை நடத்துகிறது. பொறியியல், தொழில்நுட்ப படிப்புகள், கட்டிடக்கலை மற்றும் அறிவியல் துறையில் பட்டப்படிப்பு படித்தவர்கள் இந்த தேர்வை எழுதி முதுகலை படிப்பு மற்றும் முனைவர் படிப்புக்கான உதவித் தொகையைப் பெறலாம். பல்வேறு மத்திய அரசு நிறுவனங்கள் இந்த தேர்வு மதிப்பெண்களை அடிப்படை எழுத்து தேர்வு போல பயன்படுத்திக் கொண்டு, தங்கள் நிறுவன பணியிடங்களை நிரப்பிக் கொள்கின்றன. தனியார் நிறுவனங்கள், கல்வி மையங்களிலும் இந்த தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு பணியிடங்களில் முன்னுரிமை கிடைக்கும்.
இந்நிலையில் 2016-ம் ஆண்டுக்கான கேட் தேர்வு அறிவிப்பு வெளியிடப்பட்டு உள்ளது. இந்த தேர்வுக்கு விண்ணப்பிக்கத் தேவையான தகுதி விவரங்கள் பின்வருமாறு:
என்ஜினீயரிங்/டெக்னாலஜி துறையில் டிப்ளமோ (3 ஆண்டு) மற்றும் பட்டப்படிப்பு படித்தவர்கள் இந்த தேர்வை எழுதலாம். ஆர்கிடெக்சர் 5 ஆண்டு படிப்பை முடித்தவர்கள் மற்றும் இறுதியாண்டு படித்துக் கொண்டிருப்பவர் களும் எழுதலாம். அறிவியல் பட்டப்படிப்பு படித்தவர்களும் விண்ணப்பிக்கலாம். பெண் விண்ணப்பதாரர்கள், எஸ்.சி., எஸ்.டி. பிரிவினர் மற்றும் மாற்றுத் திறனாளிகள் ரூ.750-ம் மற்றவர்கள் ரூ.1500-ம் கட்டணம் செலுத்தி விண்ணப்பிக்க வேண்டும். விருப்பமும், தகுதியும் உள்ளவர்கள் செப்டம்பர் 1ஆம் தேதி முதல் செப்டம்பர் 15ஆம் தேதிக்குள் இணையதளத்தின் மூலம் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை சமர்ப்பிக்க வேண்டும். கேட் தேர்வு 2016 பிப்ரவரி முதல் வாரத்திற்குள் நடத்தப்படும். மேலும் இந்த தேர்வு குறித்த விரிவான விபரங்களுக்கு http://gate.iisc.ernet.in என்ற இணையதளத்தை பார்க்கவும்.
English Summary : 2016 Gate exam timetables announxed,