விராட் கோலி தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி இங் கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து டெஸ்ட் போட்டிகளில் விளையாடி வருகிறது. இரு அணிகள் இடை யிலான 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் எட்ஜ்பஸ்டனில் நடைபெற்ற முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 31 ரன்கள் வித்தியாசத்தில் வெற் றியை கோட்டைவிட்டிருந்த நிலை யில் லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெற்ற 2-வது டெஸ்ட் போட்டியில் எந்த ஒரு கட்டத்திலும் போராடாமல் இன்னிங்ஸ் மற்றும் 159 ரன்கள் வித்தியாசத்தில் சரணடைந்திருந்தது.
அதேவேளையில் நாட்டிங்கா மில் நடைபெற்ற 3-வது டெஸ்ட் போட்டியில் அனைத்து துறைக ளிலும் மேம்பட்ட திறனை வெளிப் படுத்தி மீண்டு வந்து இங்கி லாந்து அணிக்கு பதிலடி கொடுத் தது இந்திய அணி. இதனால் அந்த டெஸ்டில் 203 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி கண்டி ருந்தது விராட் கோலி குழு. தொடரில் இந்திய அணி 1-2 என பின்தங்கிய நிலையில் 4-வது டெஸ்ட் போட்டி சவுத்தாம்ப்டனில் உள்ள ரோஸ் பவுல் மைதானத்தில் இன்று தொடங்குகிறது.
3-வது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி முழு ஆதிக்கம் செலுத்தியதால் இன்று தொடங் கும் சவுத்தாம்ப்டன் டெஸ்ட் போட்டி மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. பேட்டிங்கில் ஷிகர் தவண், கே.எல்.ராகுல் ஜோடி சிறந்த அடித்தளம் அமைத்து கொடுக்க தொடங்கியுள்ளனர். மேலும் விராட் கோலிக்கு உறு துணையாக சேதேஷ்வர் புஜாரா, அஜிங்க்ய ரஹானே ஆகியோரும் செயல்படத் தொடங்கி உள்ளது அணியின் பலத்தை அதிகரித் துள்ளது. மேலும் ஹர்திக் பாண் டியா ஆல்ரவுண்டர் திறனை முழுமையாக வெளிப்படுத்தத் தொடங்கி உள்ளதும் கூடுதல் வலு சேர்த்துள்ளது.
ஜஸ்பிரித் பும்ராவின் வருகை யால் பந்து வீச்சு அதீத பலம் கண்டுள்ளது. இந்தத் தொடரில் இது வரை இந்திய பந்து வீச்சாளர் கள் கைப்பற்றிய 46 விக்கெட்க ளில் வேகப்பந்து வீச்சாளர்கள் மட்டும் வீழ்த்திய விக்கெட்களின் எண்ணிக்கை 38 ஆகும். ரோஸ் பவுல் மைதான ஆடுகளத்தில் கணிசமான அளவில் புற்கள் காணப்படுகிறது. இதனால் இந்திய வேகப் பந்து வீச்சாளர்கள் மீண்டும் ஒரு முறை இங்கிலாந்து பேட்ஸ்மேன்களுக்கு நெருக்கடி கொடுக்க ஆயத்தமாகி உள்ளனர்.
இந்திய அணியில் அஸ்வின் முழு உடல் தகுதியுடன் இல்லை. இதனால் அவர் இன்று களமிறங்கு வது சந்தேகம் என்றே கருதப்படு கிறது. அவர், விளையாடவில்லை என்றால் ரவீந்திர ஜடேஜா அல் லது உமேஷ் யாதவ் களமிறக்கப் படலாம். ஒருவேளை கூடுதல் பேட்ஸ்மேனுடன் களமிறங்க முடிவு செய்தால் கருண் நாயருக்கு வாய்ப்பு கிடைக்கக்கூடும்.
இங்கிலாந்து அணியை பொறுத் தவரையில் நாட்டிங்காமில் அடைந்த தோல்விக்கு பதிலடி கொடுக்கும் முனைப்பில் களமிறங் குகிறது. அந்த அணியில் விளை யாடும் லெவனில் ஆலிவர் போப், கிறிஸ் வோக்ஸ் ஆகியோர்களுக்கு பதிலாக மொயின் அலி , சாம் கர்ரன் சேர்க்கப்பட்டுள்ளனர். ரோஸ் பவுல் மைதானத்தில் இதுவரை 2 டெஸ்ட் போட்டி மட்டுமே நடைபெற்றுள்ளது. 2011-ல் இலங்கைக்கு எதிரான இங்கு நடை பெற்ற போட்டியை டிரா செய்த இங்கிலாந்து அணி, 2014-ம் ஆண்டு இந்தியாவுக்கு எதிரான டெஸ்டில் 266 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி கண்டிருந்தது.
நேரம்: பிற்பகல் 3.30 மணி
நேரடி ஒளிபரப்பு: சோனி டென் 3