சீனாவின் தென்மேற்கு பகுதியில் உள்ள யுனான் மாகாணத்தின் தலைநகரான குன்மிங் நகரில் இருந்து ஏற்கனவே இந்தியாவின் தலைநகர் புதுடெல்லி மற்றும் கொல்கத்தா ஆகிய நகரங்களுக்கு நேரடி விமான சேவை இருந்து வரும் நிலையில் தற்போது மூன்றாவது நகரமான சென்னைக்கு நேரடி விமான சேவை தொடங்கப்பட உள்ளது. இந்த தகவலை குன்மிங் மாகாண துணை கவர்னர் கோவாஷுசன் தெரிவித்துள்ளார்.
இரு நாடுகளின் தூதரக வட்டாரங்கள் இந்த தகவலை உறுதி செய்துள்ளன. சீனாவில் தென் மேற்கில் உள்ள யுனான், சிசுவான் மற்றும் குப்ஷோ ஆகிய 3 மாகாணங்கள் மற்றவைகளை போன்று அதிக வளர்ச்சி அடையவில்லை. எனவே, அவற்றை வளர்ச்சி அடைய செய்ய சீனா அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற் கொண்டு வருகிறது.
இந்தியாவில் கிழக்கு கடற்கரை நகரங்களில் வர்த்தக ரிதியிலான நடவடிக்கைகளை மேம்படுத்த திட்டமிட்டுள்ளது அதன்படி கொல்கத்தா மற்றும் சென்னையில் புதிதாக சீன தூதரகங்கள் திறக்கப்பட உள்ளது. அதே போன்று யுனான் மற்றும் தாய்லாந்து இடையே ரெயில் போக்குவரத்து தொடங்கப்பட உள்ளது.
English Summary : Direct Air transport between Chennai – Kunming City in China.