‘என்னை அறிந்தால்’ படத்தின் வெற்றிக்கு பின்னர் அஜீத் நடிக்கவிருக்கும் அடுத்த படத்தை சிறுத்தை சிவா இயக்கவுள்ளார் என்ற தகவல் உறுதிப்படுத்தப்பட்ட நிலையில் தற்போது இந்த படத்தின் இசையமைப்பாளர் அனிருத் என்பதையும் படக்குழு அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.

இதுகுறித்து அனிருத் தனது டுவிட்டரில் தெரிவித்திருப்பதாவது, ‘தல அஜீத் நடிக்கும் ‘அஜீத் 56′ படத்திற்கு இசையமைக்க நான் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளேன் என்பதை பெருமையுடன் தெரிவித்து கொள்வதோடு இந்த படம் தன்னுடைய இசையுலக வாழ்க்கையில் ஒரு மறக்க முடியாத படமாக இருக்கும் என நம்புகிறேன்’ என்று தெரிவித்துள்ளார்.

ஏ.எம்.ரத்னம் தயாரிக்கவுள்ள இந்த படத்தின் ஆரம்ப கட்ட பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது. இந்த படத்தில் அஜீத்துக்கு ஜோடியாக ஸ்ருதிஹாசன் நடிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.

English Summary: Aniruth is going to make music for Ajith’s next Movie with Siruthai Siva.