சென்னை ராணி மேரி பெண்கள் கல்லூரியின் நூற்றாண்டு விழா தற்போது நடைபெற்று வருகிறது. இதன் ஒரு பகுதியாக இந்த கல்லூரியின் வரலாற்றுத்துறையும், தேசிய மனித உரிமை வாரியமும் இணைந்து ஒரு கருத்தரங்கை நேற்று நடத்தியுள்ளது.

“பெண்களுக்கு பாலின நீதியும், பிரச்சினைகளும், சவால்களும்’’ என்ற தலைப்பில் நடைபெற்ற இந்த கருத்தரங்கத்திற்கு கல்லூரி முதல்வர் அக்தர் பேகம் தலைமை தாங்கினார். மாநில மனித உரிமை ஆணையத்தின் தலைவர் நீதிபதி மீனாகுமாரி இந்த கருத்தரங்கை தொடங்கி வைத்து பேசியபோது, ‘பெண்களுக்கு மனித உரிமை குறித்த அவசிய தேவைகளையும், இந்திய அரசியலமைப்பில் உள்ள பாலின சமத்துவங்கள் குறித்தும் விரிவாக விளக்கி கூறினார்.

இந்த கருத்தரங்கில் பன்னாட்டு நீதி முனையம் தலைவர் மெர்லின் ப்ரீடா, மாநில மனித உரிமை வாரியத்தின் பதிவாளர் கோபிநாத், தமிழ்நாடு இன்ஸ்டியூட் ஆப் லேபர் ஸ்டெடிவ் பேராசிரியர் ரமேஷ்குமார், சென்னை ஐகோர்ட்டு வக்கீல் சுதாராமலிங்கம் ஆகியோர் பங்கு பெற்றனர்.

இறுதியில் கல்லூரியின் வரலாற்றுத்துறை பயிற்சி பட்டறை ஒருங்கிணைப்பாளர்-உதவி பேராசிரியை மு.தேன்மொழி வரவேற்புரை ஆற்றினார்.