Tasmacshop
சென்னை ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் வரும் 27ஆம் தேதி நடைபெறவுள்ளது. இந்த தேர்தலுக்கான பிரச்சாரம் வரும் நாளை மாலை 5 மணியுடன் முடிவடகிறது. 27ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெறவுள்ளதை அடுத்து சென்னை-திருவள்ளூர் மாவட்டங்களில் உள்ள அனைத்து டாஸ்மாக் கடைகளும் நாளை மாலை 5 மணி முதல் 27-ஆம் தேதி நள்ளிரவு வரை மூடப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.

இதுகுறித்து உள்துறை (மதுவிலக்கு-ஆயத்தீர்வைத் துறை) முதன்மைச் செயலாளர் அபூர்வ வர்மா நேற்று வெளியிட்ட உத்தரவு ஒன்றில் கூறியிருப்பதாவது:

சென்னை ஆர்.கே.நகர் தொகுதியில் பிரச்சாரம் வரும் 25-ஆம் தேதி மாலை 5 மணியுடன் நிறைவடைகிறது. அப்போது முதல் வாக்குப் பதிவு தினமான வருகிற 27-ஆம் தேதி வரை டாஸ்மாக் கடைகளை  மூட இந்திய தேர்தல் ஆணையம் ஒப்புதல் அளித்துள்ளது. இதன்படி டாஸ்மாக் கடைகள், பார்கள் மூடுவதற்கான உத்தரவுகளை தமிழக அரசு வெளியிடவும் தேர்தல் ஆணையம் அறிவுறுத்தியிருந்தது.

இந்திய தேர்தல் ஆணையத்தின் ஒப்புதல் அளித்துள்ளபடி, வருகிற 25- ஆம் தேதி மாலை 5 மணி முதல் வருகிற 27-ஆம் தேதி நள்ளிரவு வரை சென்னை, திருவள்ளூர் மாவட்டம் முழுவதும் உள்ள டாஸ்மாக் கடைகள், மதுக் கூடங்கள் உள்ளிட்டவை மூடப்பட்டிருக்கும். மேலும், வாக்கு எண்ணிக்கை தினமான ஜூன் 30-ஆம் தேதியும் டாஸ்மாக் கடைகள் மற்றும் பார்கள் மூடப்பட்டிருக்கும்.

டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டிருக்கும் நிலையில், சட்ட விரோதமாக மது பாட்டில்களை பதுக்கி வைப்பதோ, எடுத்துச் செல்வதோ குற்றமாகும். இதில் ஈடுபடுவோர் மீது தமிழக காவல் துறை இயக்குநர், கூடுதல் இயக்குநர் (அமலாக்கம்), மது விலக்கு, ஆயத்தீர்வைத் துறை ஆணையாளர், காவல் துறை கூடுதல் இயக்குநர் (சட்டம்-ஒழுங்கு), சென்னை, திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர்கள் ஆகியோர் உரிய நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்று தனது உத்தரவில் அபூர்வ வர்மா தெரிவித்துள்ளார்.

 

English Summary : Arkenakar byelection : the order from tomorrow, it’ll close up shop.