metrotrain
சென்னை மெட்ரோ ரயில் பாதையான கோயம்பேடு முதல் ஆலந்தூர் வரையிலான பாதைகளின் பணிகள் முழுமையாக முடிவடைந்து மிக விரைவில் ரயில் போக்குவரத்து இயங்கவுள்ளது. இந்நிலையில் கோயம்பேடு முதல் ஆலந்தூர் வரையிலான தூரத்தை மெட்ரோ ரயில் வெறும் 17 நிமிடத்தில் கடந்துவிடும் என்று மெட்ரோ ரயில் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

கோயம்பேடு ரயில் நிலையத்தில் இருந்து கிளம்பும் மெட்ரோ ரயில், அரும்பாக்கம், வடபழனி, அசோக்நகர், சிட்கோ வழியாக ஆலந்தூர் செல்லும் என்றும், இந்த 9.5 கிலோ மீட்டர் தூரத்தை 17 நிமிடங்களில் மெட்ரோ ரயில் கடந்து செல்லும் என்றும்  இந்த பாதையில்  10 முதல் 15 நிமிடத்துக்கு ஒரு ரெயில் வீதம் இயக்க திட்டமிடப்பட்டுள்ளதாகவும், மெட்ரோ ரயில் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மேலும் மெட்ரோ ரயில்கள் அதிகபட்சமாக மணிக்கு 80 கி.மீ. வரை வேகத்தில் செல்லக் கூடியதாக இருந்தாலும், கோயம்பேடு முதல் ஆலந்தூர் வரை  அடுத்தடுத்து ரயில் நிலையங்கள் வருவதால் 40 கி.மீ. வேகத்தில் மட்டுமே செல்லும் என்றும்.அதிகாரிகள் தெரிவித்தனர்.

மெட்ரோ ரெயில் இயக்கத்தை கோயம்பேட்டில் உள்ள நிர்வாக அலுவலகத்தின் 3வது தளத்தில் அமைந்திருக்கும், கட்டுப்பாட்டு அறையில் இருந்தே கண்காணிக்க முடியும் என்றும் இது ஒரு தானியங்கி வசதி கொண்டது என்றும் கூறிய அதிகாரிகள் ரெயில் புறப்படும் நேரம், நிலையங்களை சென்றடையும் நேரம், நிற்கும் நேரம், சிக்னல் ஆகியவை கம்ப்யூட்டரில் பதிவு செய்யப்பட்டுள்ளது என்று கூறினர்.

 

English Summary : CMBT – Alantur 17 minute trip,  Metro Railway officials.