ஜி.வி.பிரகாஷ்குமார் நடித்த ‘டார்லிங்’ படத்தின் வெற்றியை அடுத்து அவர் நடித்துள்ள ‘த்ரிஷா இல்லனா நயன்தாரா’ என்ற படத்தின் பாடல் வெளியீடு சமீபத்தில் நடைபெற்றது. இந்த படம் விரைவில் வெளியாகவுள்ளதாக அறிவிக்கப்பட்ட நிலையில் சென்னை உயர்நீதிமன்றம் இந்த படத்திற்கு தடை விதித்துள்ளது.

த்ரிஷா இல்லனா நயன்தாரா’, அந்த பணத்திற்கு சி.ஜெ.ஜெயக்குமார் தந்த காசோலைகள் வங்கியில் போதுமான பணம் இல்லாமல் திரும்பிவிட்டதாகவும் கூறப்படுகிறாது. எனவே ஆனந்தவிகடன் நிறுவனம் தங்களுக்கு தர வேண்டிய பணத்தை தர வேண்டியும், அதுவரை தங்கள் நிறுவன பணத்தை பயன்படுத்தி தயாரிக்கப்பட்ட ‘த்ரிஷா இல்லனா நயன்தாரா’ படத்தை வெளியிடவோ, விற்கவோ கூடாது என்று கோரிக்கை விடுத்து சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. இந்த வழக்கில், 4.6.2015-க்குள் கடன் தொகையை திரும்ப செலுத்த சி.ஜெ.ஜெயக்குமார் உறுதியளிக்க வேண்டும் எனவும் இல்லையெனில் ‘த்ரிஷா இல்லனா நயன்தாரா’ படம் ஜப்தி செய்யப்படும் எனவும் உயர்நீதிமன்றம் சமீபத்தில் உத்திரவிட்டது.

ஆனால் நேற்று 4.6.2015 அன்று மீண்டும் இந்த வழக்கு விசாரணைக்கு வந்த போது கடன் தொகைக்கு சி.ஜெ.ஜெயக்குமார் எவ்வித உறுதியும் அளிக்காததால், இரண்டு வாரத்திற்குள் ரூ.75 லட்சம் பாக்கிக்கு ஈடாக சொத்து தரவேண்டும் என்றும், அதுவரை ‘த்ரிஷா இல்லனா நயன்தாரா’ படத்தை வெளியிட தடைவிதித்தும் சென்னை உயர்நீதி மன்றம் உத்தரவிட்டுள்ளது.

இந்த தடை காரணமாக ஜி.வி.பிரகாஷ்குமார் உள்பட படக்குழுவினர் அதிர்ச்சியில் உள்ளனர்.

English Summary : Since “Trisha Illana Nayanthara” film producer C.J. Jayakumar owe 75 lakh’s for Anandha Vikatan organization, Chennai High court issues a ban for releasing the film.