ரெயில்களில் பயணம் செய்யும் பயணிகளின் வசதியை முன்னிட்டு, தென்னக ரயில்வே அவ்வப்போது சிறப்பு ரயில்களை அறிவித்து வருகிறது. இந்த சிறப்பு ரெயில்கள் கூட்ட நெரிசலை தவிர்த்து வரும் நிலையில் இஸ்லாமியர்களின் புனித திருநாளான ரம்ஜானை முன்னிட்டு சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் இருந்து சிறப்பு ரயில் அறிவிப்பு ஒன்றை நேற்று தென்னக ரயில்வே அறிவித்துள்ளது.

சென்னை சென்ட்ரல் ரெயில் நிலையத்தில் இருந்து எர்ணாகுளம் ரயில் நிலையத்திற்கு வண்டி எண் 06065 என்ற அதிவரைவு சிறப்பு ரெயில் ஜூலை 17ஆம் தேதி, ஜூலை 24ஆம் தேதி, மற்றும் ஜூலை 31ஆம் தேதி ஆகிய தேதிகளில் இரவு 10.30 மணிக்கு புறப்பட்டு மறுநாள் காலை 10.50 மணிக்கு சென்றடையும்.

இதேபோல மறுமார்க்கத்தில் எர்ணாகுளத்தில் கிளம்பும் வண்டி எண். 06066 என்ற சிறப்பு ரெயில், ஜூலை 19 மற்றும் ஜூலை 26 ஆகிய தேதிகளில் இரவு 7 மணிக்கு புறப்பட்டு மறுநாள் காலை 7.15 மணிக்கு சென்னை சென்ட்ரல் வந்து சேரும்.

இந்த ரெயில் அரக்கோணம், காட்பாடி, ஜோலார்பேட்டை, சேலம், ஈரோடு, திருப்பூர், கோவை, பாலக்காடு ஆகிய ரெயில் நிலையங்களில் நின்று செல்லும். இந்த சிறப்பு ரெயில்களுக்கான முன்பதிவு நேற்று முதல் தொடங்கியுள்ளதாக ரெயில்வே துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

English Summary : Chennai Central – Ernakulam Superfast Special Train Announced by Southern Railway.