சென்னை மக்களின் கனவு திட்டமான மெட்ரோ ரயில் திட்டம் கடந்த ஜூலை மாதம் 29ஆம் தேதி தமிழக முதல்வர் ஜெயலலிதாவால் தொடங்கப்பட்டு வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கின்றது. முதல்கட்டமாக சென்னை கோயம்பேடு முதல் ஆலந்தூர் வரை இயங்கிக் கொண்டிருக்கும் இந்த மெட்ரோ ரயில் திட்டத்தில் தினமும் 10 ரயில்கள் இயக்கப்படுகிறது. ஏதாவது பழுது ஏற்பட்டால் மாற்று ரயில்கள் விடுவதற்காக 2 ரெயில்கள் 8 தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.
இந்நிலையில் அடுத்தடுத்த கட்ட சென்னை மெட்ரோ ரயில் திட்டத்திற்காக 4 பெட்டிகள் கொண்ட 42 ரயில்கள் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது. ரயில் பெட்டிகள் தயாரிக்கும் பணியில் பிரேசிலில் உள்ள ‘அல்ஸ்டாம்’ என்ற தனியார் நிறுவனம் ஈடுபட்டுள்ளது. ஒவ்வொரு பெட்டியும் ரூ.9 கோடி செலவில் தயாரிக்கப்படுகிறது. இதற்காக ரூ.1471.39 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. பிரேசில் நிறுவனம் தனது கிளை நிறுவனத்தை ஆந்திர மாநிலம் தடா அருகே உள்ள ஸ்ரீசிட்டில் நிறுவி 9 ரயில்களை அங்கு தயாரித்து வருகிறது.
பிரேசிலில் தயாரிக்கப்பட்ட ரயில்கள் கப்பல்கள் மூலம் சென்னைக்கு கொண்டு வரப்பட்டன. ஸ்ரீசிட்டியில் தயாரான 4 ரெயில்கள் டிரைவர் லாரிகள் மூலம் கோயம்பேட்டில் உள்ள மெட்ரோ ரயில் பணிமனைக்கு கொண்டு வரப்பட்டன. இத்துடன் மெட்ரோ ரயில்களின் எண்ணிக்கை 29 ஆக உயர்ந்துள்ளது. இன்னும் 13 ரெயில்கள் வரவேண்டி உள்ளது. மெட்ரோ ரெயில் பாதை பணிகள் முடிதற்குள் அவைகளும் வந்துவிடும்.
English Summary:Chennai Metro Rail project More 4 trains Comes to Chennai.