தமிழக சட்டமன்ற தேர்தலுக்கான வேட்புமனுக்கள் தாக்கல் செய்யப்பட்டு வருகின்றன. முதலமைச்சர் ஜெயலலிதா, திமுக தலைவர் கருணாநிதி, மக்கள் நலக்கூட்டணியின் தலைவர்கள், பாமக முதல்வர் வேட்பாளர் அன்புமணி உள்ளிட்ட பலர் ஏற்கனவே வேட்புமனுக்கள் தாக்கல் செய்துவிட்டனர். இந்நிலையில் சென்னை மாவட்டத்தில் உள்ள 16 தொகுதிகளில் போட்டியிட இதுவரை 252 பேர் வேட்பாளர்கள் வேட்புமனு தாக்கல் செய்துள்ளதாக தேர்தல் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். இதில், ஆண் வேட்பாளர்கள் 214 பேரும், பெண் வேட்பாளர்கள் 37 பேரும், திருநங்கை வேட்பாளர் ஒருவரும் என்பது குறிப்பிடத்தக்கது.

சென்னை மாவட்டத்தில் நேற்று ஒரே நாளில் அதிமுக, திமுக, பாஜக, மக்கள் நலக்கூட்டணி, பாமக, நாம் தமிழர் உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சிகளைச் சேர்ந்த 120 பேர் வேட்புமனு தாக்கல் செய்துள்ளதாக மாவட்ட தேர்தல் அலுவலகம் தெரிவித்துள்ளது. அவர்களின் விபரங்கள் பின்வருமாறு:

ஆர்.கே.நகர்
1. இ. மதுசூதனன் (அதிமுக- மாற்று)
2. எஃப். ஆக்னஸ் (பாமக)
3. விஜயலட்சுமி (பாமக- மாற்று)
4. என். நடராஜன் பாஜக- மாற்று)
5. ஜி.தேவி (நாம் தமிழர் கட்சி)
6. பி.கஜேந்திரன் (சுயேச்சை)
7. என். நம்பிராஜன் (சுயேச்சை)
8. ஆர். ரமேஷ் (சுயேச்சை)
9. பி. பிரேம்குமார் (சுயேச்சை)
10. வி. துரைவேல் (சுயேச்சை)
11. வி. நரேஷ்பாபு (சுயேச்சை)
12. செல்வராணி (சுயேச்சை)
13. எஸ்.மனோகரன் (சுயேச்சை)
14. ஜகதீஸ்வரர் ரெட்டி (சுயேச்சை)

பெரம்பூர்
1. வெற்றிவேல் (அதிமுக)
2. மனோகரன் (அதிமுக- மாற்று)
3. லஷ்மி லஷ்மண் (பாஜக- மாற்று)
4. வெற்றி தமிழர் (நாம் தமிழர் கட்சி)
5. வசந்தகுமாரி (லோக் ஜன சக்தி)
6. மகேந்திரன் (மக்களாட்சி கட்சி)
7. ராஜா (சுயேச்சை)
8. பிரவீண் குமார் (சுயேச்சை)
9. காமராஜ் (சுயேச்சை)
10. விஜி (சுயேச்சை)

கொளத்தூர்
1. ஜே.சி.டி.பிரபாகரன் (அதிமுக)
2. மதிவாணன் (தேமுதிக)
3. சுரேஷ்பாபு (தேமுதிக)
4. சேவியர் செலிக்ஸ் (நாம் தமிழர் கட்சி)
5. கமிலஸ் செல்வா (நாம் தமிழர் கட்சி)
6. வி.சத்யநாராயணன்
(இளைஞர், மாணவர் அமைப்பு)
7. சாஜினி (சுயேச்சை)
8. புஷ்பராஜ் (சுயேச்சை)
9. ஏ. சீதா (சுயேச்சை)
10. ஷரவணன் (சுயேச்சை)
11. விஜயகுமாரி (சுயேச்சை)

வில்லிவாக்கம்
1. தாடி மா.ராசு (அதிமுக)
2. கே.பாலன் அதிமுக (மாற்று)
3. ஏ.பழனிவேல் (பிஎஸ்பி)
4. க.மு.சுச்சரிதா
(இளைஞர்கள், மாணவர்கள் அமைப்பு)
5. பி. முகமது இஃபால் பாஷா (சுயேச்சை)
6. ஜே. அசோக்குமார் (சுயேச்சை)
திரு.வி.க. நகர்
1. நீலகண்டன் (அதிமுக)
2. தங்கதுரை (அதிமுக- மாற்று)
3. தாயகம் கவி (எ) சிவக்குமார் (திமுக)
4. வேணுகோபால் (சுயேச்சை)-2
5. சதீஷ் (பகுஜன் சமாஜ்)

எழும்பூர்
1. பரிதி இளம்வழுதி (அதிமுக)
2. ரவிச்சந்திரன் (திமுக)-2
3. கஸ்தூரி (திமுக)-2
4. பிரபு (தேமுதிக)-3
5. பாபு (தேமுதிக)
6. வெங்கடேசன் (பாஜக)
7. ஜெயலட்சுமி (நாம் தமிழர் கட்சி)

ராயபுரம்
1. டி.ஜெயகுமார் (அதிமுக) (4)
2. பிஜூ சாக்கோ (தமாகா)
3. ஆனந்தராஜ் (நாம் தமிழர் கட்சி)
4. கணேஷ்பிரபு (சுயேச்சை)

துறைமுகம்
1. கே.எஸ்.சீனிவாசன் (அதிமுக)
2. ஆர்.மதன் (அதிமுக- மாற்று)
3. முராத் புகாதி (மதிமுக)
4. எம்.எல்.ரவி (தேசிய மக்கள் கட்சி)
5. அபேத்கர்
(இளைஞர், மாணவர் அமைப்பு)
6. நதியா (சுயேச்சை)
7. சிவசந்திரன் (சுயேச்சை)
8. ஜி. கிருஷ்ணகுமார் (சுயேச்சை)

சேப்பாக்கம் – திருவல்லிக்கேணி
1. நூர்ஜஹான் (அதிமுக)
2. வி.கே.பாபு (அதிமுக மாற்று)
3. ஜாபர் சாதிக் (எழுச்சி தேசம்)
4. விவேகானந்தா (சுயேச்சை)
5. அப்பு மூசா காதரி (சுயேச்சை)

ஆயிரம் விளக்கு
1. பா.வளர்மதி (அதிமுக)-4
2. சந்திரசேகரன் (அதிமுக-மாற்று)
3. கே.சதாசிவம் (திமுக-மாற்று)
4. ஏழுமலை (பாமக-மாற்று)
5. முருகேசன் (நாம் தமிழர் கட்சி)
6. ஜி. கலியமூர்த்தி
(நாம் தமிழர் கட்சி-மாற்று)
7. டி.எஸ்.தனஞ்செழியன் (சுயேச்சை)
8. அருந்ததி ராமச்சந்திரன் (சுயேச்சை)

அண்ணா நகர்
1. எஸ்.கோகுல இந்திரா (அதிமுக)
2. ஏ.இ.வெங்கடேசன் (அதிமுக மாற்று)
3. ராஜேஸ்வரி (நாம் தமிழர் கட்சி)
4. அமுதா (நாம் தமிழர் கட்சி- மாற்று)
5. ரவிக்குமார் (சுயேச்சை)

விருகம்பாக்கம்
1. வி.என்.ரவி (அதிமுக)
2. தமிழிசை செளந்தரராஜன் (பாஜக)
3. சுவாமிநாதன் (அதிமுக மாற்று)
4. பார்த்தசாரதி (தேமுதிக)
5. பி.எஸ்.சரவணன் (பாமக மாற்று)
6. செந்தில்குமார்
(இந்து மக்கள் கட்சி தமிழகம்)
7. வித்யா (நாம் தமிழர் கட்சி)
8. தினேஷ் குமார்
(அனைத்திந்திய பாட்டாளி முன்னேற்ற கட்சி)
9. சுதித் தேஜா (சுயேச்சை)
10. என்.ரவி (சுயேச்சை)

சைதாப்பேட்டை
1. சி.பொன்னையன் (அதிமுக)
2. செந்தமிழன் (அதிமுக- மாற்று)
3. கோகுல ராஜன் (சுயேச்சை)

தியாகராயநகர்
1. சத்தியநாராயணன் (அதிமுக)
2. சைதை துரைசாமி அதிமுக (மாற்று)
3. உமாதேவி (திமுக-மாற்று)
4. குமார் (தேமுதிக)
5. சுரேஷ்குமார் (தேமுதிக- மாற்று)
6. பத்மநாபன் (நாம் தமிழர் கட்சி)
7. கே.மகேஷ்
(இளைஞர், மாணவர் அமைப்பு)
8. குமார் சிருஷ்டி (சுயேச்சை)
9. ஜோதி ராஜ் (சுயேச்சை)
10. எம்.ஹரிராஜன் (சுயேச்சை)

மயிலாப்பூர்
1. ஆர்.நடராஜ் (அதிமுக)
2. வி.பாலாஜி (பகுஜன் சமாஜ்)
3. கரு.நாகராஜன் (பாஜக)
4. ஜே.மோகன் ராஜ்
(ஜெபமணி ஜனதா கட்சி)
5. டி.எஸ்.தனஞ்செயன் (சுயேச்சை)
6. சிவக்குமார் (சுயேச்சை)
7. கே. லோகநாதன் (சுயேச்சை)
8. ஜி. நந்தகோபால் (சுயேச்சை)
9. வி.எஸ்.வரதராஜன் (சுயேச்சை)

வேளச்சேரி
1. சி.முனுசாமி (அதிமுக)
2. வி.என்.ராஜன் (தேமுதிக)
3. இளங்கோ (தேமுதிக மாற்று)
4. வடிவேலு (பாமக)
5. பிரபு (சுயேச்சை)

English Summary : Details about nominated candidate in 16 constituencies Chennai.