மத்திய அரசு அலுவலர் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு கடந்த ஜனவரி 1ஆம் தேதி முதல் அகவிலைப்படி 6 சதவீதம் உயர்த்தப்பட்டது என்பதை ஏற்கனவே பார்த்தோம். இந்நிலையில் மத்திய அரசு ஊழியர்களுக்கு இணையாக மாநில அரசு ஊழியர்களுக்கும் அகவிலைப்படியை உயர்த்த வேண்டும் என அரசு ஊழியர்கள் கோரிக்கைகள் விடுத்த நிலையில் தமிழ்நாடு அரசு அலுவலர்கள், ஆசிரியர்கள், ஓய்வூதியதாரர்கள் மற்றும் குடும்ப ஓய்வூதியதாரர்களுக்கு ஜனவரி 1ஆம் தேதி முதல் அகவிலைப்படி 6 சதவீதம் உயர்த்தி வழங்க தமிழக அரசு முடிவெடுத்துள்ளது. தற்போது தேர்தல் நடத்தை விதிகள் அமலில் இருப்பதால், தேர்தல் ஆணையத்திடம் அனுமதி பெற்று, இதற்கான உத்தரவை தமிழக அரசு வெளியிட்டுள்ளது என்பது குறிப்பிடத்தகக்து.

இந்த அகவிலைப்படி உயர்வு காரணமாக உள்ளாட்சி நிறுவனங்கள் மற்றும் அரசு மானியம் பெறும் கல்வி நிறுவன அலுவலர்கள், ஆசிரியர்கள், வருவாய் துறை கிராம உதவியாளர்கள், அங்கன் வாடி மற்றும் சத்துணவு ஊழியர்கள், ஊராட்சி உதவியாளர்கள், எழுத்தர்கள் மற்றும் ஓய்வூதியர்கள், குடும்ப ஓய்வூதியர்கள் என மொத்தம் 18 லட்சத்திற்கும் அதிகமான ஊழியர்கள் பயன்பெறுவார்கள்

மொத்த அகவிலைப்படி 119 சதவிகிதத்தில் இருந்து 125 சதவீதமாக உயர்ந்துள்ளது. கடந்த ஆண்டு அக்டோபர் 16ஆம் தேதி ஜூன் 1ஆம் தேதியிட்டு 6 சதவீதம் அகவிலைப்படி உயர்த்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.

English Summary : Election Commission approves Dearness Allowance hike for government employees.