10ஆம் வகுப்பு மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு ஏற்கனவே பொதுத்தேர்வுகள் முடிவடைந்து கோடை விடுமுறை அளிக்கப்பட்டுள்ள நிலையில் நாளை முதல் உயர்நிலை பள்ளி மாணவர்கள் மற்றும் மேல்நிலைப் பள்ளி மாணவர்களுக்கு கோடை விடுமுறை விடப்படுவதாக பள்ளிக்கல்வி இயக்குநர் எஸ்.கண்ணப்பன் தெரிவித்துள்ளார். மேலும் கோடை விடுமுறை விடுமுறை முடிந்து வரும் ஜூன் 1-ம் தேதி முதல் பள்ளிகள் மீண்டும் திறக்கப்படும் என்றும் அவர் கூறியுள்ளார்.

இதுகுறித்து மேலும் அவர் கூறியதாவது:

பெரும்பாலான உயர்நிலைப் பள்ளிகள் மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் ஆண்டு இறுதித் தேர்வுகள் 21-ம் தேதி முடிவடைகின்றன. சில பள்ளிகளில் 20-ம் தேதி முடிவடைந்துவிட்டன. வருடாந்திர தேர்வைத் தொடர்ந்து அனைத்து உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளுக்கும் 22-ம் தேதி முதல் கோடை விடுமுறை விடப்படுகிறது. விடுமுறை முடிந்து ஜூன் 1-ம் தேதி பள்ளிகள் மீண்டும் திறக்கப்படும்.

தொடக்கக் கல்வி இயக்குநரகத்தின் கீழ் செயல்படும் தொடக்கப் பள்ளிகள் மற்றும் நடுநிலைப் பள்ளி களில் படிக்கும் மாணவர்களுக்கு ஆண்டு இறுதித் தேர்வுகள் ஏப்ரல் 30-ம் தேதி முடிவடையும். அவர்களுக்கு மே 1-ம் தேதி முதல் கோடை விடுமுறை விடப்பட்டு பள்ளிகள் ஜூன் 1-ல் மீண்டும் திறக்கப்படும்.

English Summary : Summer holidays starts tomorrow for school students. Classes will be re-open on June 1st.