railways-231115வி.ஐ.பிக்கள் மட்டுமின்றி சாதாரண மக்களும் அவசர காலங்களில் ‘எமர்ஜென்சி கோட்டா’வில் பயணம் செய்யலாம் என்ற நடைமுறை கடந்த பிப்ரவரி மாதம் 22ஆம் தேதி முதல் அமலுக்கு வந்தது என்பதை ஏற்கனவே பார்த்தோம். இந்நிலையில் இவ்வாறு எம்ர்ஜென்ஸி கோட்டாவில் பயணம் செய்யும் கோட்டா, ஏஜென்ஸிகளிடம் டிக்கெட் எடுப்பவர்களுக்கு கிடையாது என ரயில்வே துறை அறிவித்துள்ளது.

இண்டர்வியூ, மருத்துவ சிகிச்சை போன்ற அவசர தேவையின்போது வி.ஐ.பிக்கள் போலவே எமர்ஜென்ஸி கோட்டாவில் சாதாரண பயணிகளுக்கும் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. ஆனால் இந்த அனுமதி ஏஜெண்டுகளிடம் எடுக்கும் டிக்கெட்டு எடுப்பவர்களுக்கு கிடையாது என்று ரெயில்வே துறை அறிவித்துள்ளது. கவுண்டர்கள் மற்றும் ஆன்லைனில் எடுக்கப்படும் டிக்கெட்டுகளுக்கு மட்டுமே ‘எமர்ஜென்சி கோட்டா’ உண்டு என்பது குறிப்பிடத்தக்கது.

எமர்ஜென்சி கோட்டா ஒதுக்கீடு முறையில் சாதாரண டிக்கெட்டுகளை விட ‘தட்கலில்’ எடுக்கும் டிக்கெட்டுகளுக்கு முன்னுரிமை அளிக்கப்படும். வயதானவர்கள் மற்றும் நோயாளிகள் ரெயிலில் ஏறுவதற்கு பேட்டரி கார் மற்றும் வீல்சேர்கள் சென்ட்ரல், எழும்பூர் ரெயில் நிலையங்களில் ஏற்கனவே உள்ளன.

பயணம் செய்யும் நாள் அன்று அவர்கள் அவசரமாக அதனை தேடி செல்லும் நிலை இருந்தது. தற்போது அவர்களின் வசதிக்காக சென்ட்ரல், எழும்பூர் ரெயில் நிலையத்தில் உதவி மையங்கள் செயல்பட்டு வருகிறது.

முதியோர், நோயாளிகள் பயணம் செய்யும் தேதி குறித்து 2 நாட்களுக்கு முன்பே 044–25354457 என்ற எண்ணிற்கு தகவல் தெரிவிக்க வேண்டும். மேலும் ரெயில் புறப்படுவதற்கு 45 நிமிடத்திற்கு முன்பு அவர்கள் வருவதை உறுதி செய்ய வேண்டும்.

இதையடுத்து வயதானவர்கள், நோயாளிகள் ரெயிலில் ஏறுவதற்கான ஏற்பாடுகளை ஊழியர்கள் செய்து வைப்பார்கள். இதனால் அவர்கள் அவசரமின்றி செல்லலாம். இந்த தகவலை தெற்கு ரெயில்வே முதன்மை மக்கள் தொடர்பு அதிகாரி லட்சுமணன் தெரிவித்துள்ளார்.

English Summary: Emergency ticket cancelled to take a ticket from agencies.