தமிழ்நாடு மெர்க்கண்டைல் வங்கி லிமிடெட்  (TMB), பழமையான தனியார் துறை வங்கி, வணிக வங்கியின் பட்டியலில் இடம் பெற்றுள்ளது. துாத்துக்குடியை தலைமையிடமாகக் கொண்டு செயல்பட்டு வரும் இந்த வங்கி, 99 ஆண்டுகளை கடந்து, நுாற்றாண்டை கொண்டாடவிருக்கும்  இந்த வங்கி, வலுவான அடிப்படையையும், தொடர்ச்சியான லாபத்தை ஈட்டி வரும் தொழில் நிறுவனமாக செயல்பட்டு வருகிறது.

இந்தியா முழுவதிலும் 16 மாநிலங்கள், 4 யூனியன் பிரதேசங்களில் 12 மண்டல அலுவலகங்களையும், 509 கிளைகளையும் கொண்டுள்ளது. 4.80 மில்லியன் மகிழ்வான வாடிக்கையாளர்களை பெற்றுள்ளது. இந்த வங்கி, 1162 ஏடிஎம்களையும், 45 இ–லாபிக்கள் மற்றும் 224 பண மறுசுழற்சி இயந்திரங்களையும் கொண்டுள்ளது.

வங்கியின் கடந்த டிசம்பர் 31, 2020 காலாண்டு நிதிநிலை முடிவுகள் குறித்த இயக்குனர்களின் ஆய்வுக்கூட்டம் சென்னையில் பிப்ரவரி 2, 2021 ல் நடந்தது. இயக்குனர் குழுவின் முன்னிலையில், நிர்வாக இயக்குனர் மற்றும் தலைமை செயல் அதிகாரி திரு. கே.வி ராமமூர்த்தி முன்னிலையில், டிசம்பர் 2020 ல் முடிவடைந்த காலாண்டுக்கான மதிப்பாய்வு செய்யப்பட்ட நிதிநிலை அறிக்கையை வங்கி அறிவித்தது. இந்த நிகழ்ச்சியில் வங்கியின் தலைமை நிதி அதிகாரி, துணைத்தலைவர்கள் மற்றும் வங்கியின் பொது மேலாளர்கள் பங்கேற்றனர்.

காரணிகள் ஒன்பது மாத கால அளவு நிறைவு வளர்ச்சி
 டிசம்பர் 20 டிசம்பர் 19
மொத்த வைப்பு தொகை ரூ. 37,888.62 35,174.50 7.72 %
மொத்த கடன் தொகை ரூ. 30,212.50 27,369.72 10.39 %
மொத்த வணிகம் 68,101.12 62,544.21 8.88 %
நடப்பு /சேமிப்பு கணக்கு ரூ. 10,392.94 8,922.45 16.48 %
செயல்பாட்டு லாபம் 931.68 695.94 33.87 %
நிகர லாபம் 422.35 243.49 73.46 %
மொத்த செயல்படாத சொத்துவகை ரூ (Gross NPA). 977.88 1,410.98 -30.69 %
மொத்த செயல்படாத சொத்து % 3.24 % 5.16 % -37.21%
நிகர செயல்படா சொத்து  ரூ.(NET NPA) 270.36 564.18 -52.08 %
நிகர செயல்படா சொத்து 0.92 % 2.13 % -56.81 %
தேவையான மூலதன விகிதம் பேசல்III 17.24 % 15.87 % 8.63 %
தேவையான மூலதன விகிதம் பேசல் II 17.26 % 15.90 % 8.55 %
பாதுகாப்பு திட்ட விகிதம்(PCR) 89.31 % 78.57 % 13.67 %

 

மூன்றாவது காலாண்டு Q3 2020 -21 உடன் Q3 2019-20 (Q3 தனிநிலை)ஒப்பீடு:

 • Q2 நிகர லாபம் 78 கோடியிலிருந்து, Q3 யில், ரூ.180 கோடியாக 49.70% வளர்ச்சி
 • Q2 செயல்பாட்டு லாபம் 54  கோடியிலிருந்து, Q3 யில், ரூ.349.82 கோடியாக 35.10% வளர்ச்சி
 • Q2 ஒட்டுமொத்த வருவாய் 71 கோடியிலிருந்து, Q3 யில், ரூ.180 கோடியாக 5.11% உயர்வு.
 • Q2 ஒட்டுமொத்த வட்டி வருவாய் 00 கோடியிலிருந்து, Q3 யில், ரூ. 428.73 கோடியாக 49.70% வளர்ச்சி

வங்கி,கூடுதல்முறையான கணக்குகளுக்கான ரு.150கோடிகளுடன் உச்சநீதிமன்றத்தின் வழிகாட்டுதல்படி,  கோவிட் தொற்று கால நிலுவை தாமத 90 கணக்குகளின்படி, கூடுதல் ஒதுக்கீடுரூ.3.80கோடிகளை யும் கொண்டுள்ளது.

 கடன் முன்னுரிமை மற்றும் சிறு, குறுநுத்தர தொழில் நிறுவனங்கள் துறை:

 • வங்கியானது, விவசாயம், சிறு,குறுநடுத்தர தொழில் நிறுவனங்கள், கல்வி, வீடு கட்டுதல் போன்ற துறைகளுக்கு கடன் வழங்குவதில் முன்னுரிமை அளித்து வருகிறது. இது, வங்கியின் சரி செய்யப்பட்ட நிகர கடன் தொகையில் 57% ஆகஉள்ளது, (ஒழுங்குமுறைதேவையானது 40% )
 • முன்னுரிமை கடன் தொகையானது (முந்தைய ஆண்டில் ரூ.17866.38 கோடி) ரூ.21163.85 கோடியாக 46% உயர்ந்துள்ளது.
 • வேளாண் துறைக்கான வங்கியின் கடன் தொகை ரூ.7,812.54 கோடி. ஒட்டுமொத்த கடன் தொகையில் வேளாண் துறைக்கான கடன் 86%  (ஒழுங்குமுறை தேவையானது 18% )ஆகவும் உள்ளது.
 • சிறு,நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறையின் கடன் தொகை ரூ.11.893.72 கோடியாக (முந்தைய ஆண்டில் ரூ.10,362.56 கோடி) 14.78% வளர்ச்சி பெற்றுள்ளது.

முந்தைய ஆண்டுடன் ஒரு ஒப்பீடு:

 • வங்கியின் வைப்பு நிதி (டெபாசிட்) ரூ.37,888.62 கோடியாக (முந்தைய ஆண்டில் ரூ.35,174.49 கோடி) 7.72 சதவீதம் உயர்ந்துள்ளது; சராசரி வளர்ச்சி 48% ஆகும்.
 • வங்கியின் நடப்பு மற்றும் சேமிப்பு கணக்குகள் நிலை ரூ.10392.94 கோடியாக 48% வளர்ச்சியடைந்துள்ளது; சராசரி வளர்ச்சியானது 18.58%.
 • வங்கியின் கடன் வளர்ச்சி நிலை ரூ.30,212.50 கோடியாக 39% வளர்ச்சி பெற்றுள்ளது. சராசரி வளர்ச்சி 9.85%.
 • விவசாயத்துக்கான கடன் ரூ.7812 கோடியாக (முந்தைய ஆண்டு ரூ.6558 கோடி) 19.11% வளர்ச்சி பெற்றுள்ளது.
 • சில்லறை கடன், ரூ.6133 கோடியாக ( முந்தைய ஆண்டு ரூ.5103 கோடி) 18% வளர்ச்சி பெற்றுள்ளது.
 • சிறு, குறுநடுத்தர தொழில்களுக்கான கடன்  ரூ.11894 கோடியாக ( முந்தைய ஆண்டு ரூ.10393 கோடி)  77% வளர்ச்சியடைந்துள்ளது.
 • வட்டியில்லா வருவாய் ரூ.448.16 கோடி (முந்தைய ஆண்டில் ரூ.354.54 கோடி)
 • செயல்பாட்டு செலவினங்கள் ரூ.678.80 கோடி ( முந்தைய ஆண்டில் ரூ.632.01 கோடி)
 • செயல்பாட்டு லாபம் ரூ.931.68 கோடி (முந்தைய ஆண்டில் ரூ.695.94 கோடி)
 • நிகர வட்டி வருவாய் (NII), ரூ.1162.32 கோடி (முந்தைய ஆண்டு 41 கோடி)
 • வங்கியின் நிகர சொத்துமதிப்பு ரூ.4,404 கோடியாக (முந்தைய ஆண்டில் ரூ.3,817 கோடி)ரூ.587 கோடி,15.36% உயர்ந்துள்ளது.
 • வட்டி வருவாய் ரூ.2,732.77 கோடியாக, முந்தைய ஆண்டு ரூ.2,571.39 கோடியை காட்டிலும் 38 கோடி உயர்ந்து 6.28% வளர்ச்சிடையந்துள்ளது.
 • வட்டிக்கான செலவு தொகை ரூ. 1597.98 கோடியிலிருந்து ரூ.1570.45 கோடியாக குறைந்துள்ளது. (குறைவு ரூ.27.53 கோடி –1.72%)
 • ஒட்டுமொத்த செயல்படாசொத்து (Gross NPA) மதிப்பு 24% ஆக குறைந்துள்ளது. நிகர செயல்படா சொத்து (Net NPA) மதிப்பு 0.92% குறைந்துள்ளது.
 • வங்கியின் போதுமான மூலதன விகிதம் ( capital adequacy ratio) ( BaselIII) 17.24% உயர்ந்துள்ளது. (முந்தைய ஆண்டில் 87%)
 • வங்கியின் போதுமான மூலதன விகிதம் (  ( capital adequacy ratio) (BaselII) 17.26% உயர்ந்துள்ளது. (முந்தைய ஆண்டில் 96%)
 • வங்கியின் முன்னேற்பாட்டு பாதுகாப்பு விகிதம் (Provision Coverage Ratio)89.31% ஆக உயர்ந்துள்ளது (முந்தைய ஆண்டில் 57%)

 

டிசம்பர் 2020 காலாண்டு வரையிலான விரிவாக்க நடவடிக்கைகள்:

 • 55 புதிய பண மாறுசுழற்சி இயந்திரன்கள்,வங்கியின் கிளைகள்/ ஏடிஎம் மையங்களில் நிறுவப்பட்டு இதன் எண்ணிக்கை 224 ஆக உள்ளது.
 • 6 புதிய ஏடிஎம் மையங்கள் கூடுதலாக சேர்க்கப்பட்டு, இதன் எண்ணிக்கை தற்போது 1162 ஆக உயர்ந்துள்ளது.
 • 14 இ – லாபிஸ் இந்த ஆண்டு துவக்கப்பட்டுள்ளது; இதன் எண்ணிக்கை 45 ஆக அதிகரித்துள்ளது.

2020 – 21 ம் ஆண்டில் துவங்கப்பட்ட புதிய முனைப்புகள்:

 • சென்னை, மற்றும் துாத்துக்குடி – புதுக்கோட்டையில் உள்ள ரொக்க கிடங்குகளில் முழுமையான தானியங்கி ரோபாட்டிக் இயக்கத்தை தமிழ்நாடு மெர்க்கண்டைல் வங்கி துவக்கியுள்ளது.
 • வங்கியின் இணையத்தளம், கவர்ச்சிகரமான, எளிதாக பயன்படுத்தும் வகையில் மாற்றி அமைக்கப்பட்டுள்ளது.
 • வாட்ஸ்ஆப் வங்கி முறை அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
 • நிதி சாரா சேவைகளுக்காக மொபைல் பயன்பாடு, டிஜி லாபி துவக்கப்பட்டுள்ளது.
 • அரசு சார்ந்த வங்கிக் கணக்குகளை கையாள, பொது நிதி மேலாண்மை அமைப்புடன் ஒருங்கிணைக்கப்பட்டுள்ளது.

செயல்படுத்த திட்டமிடப்பட்டுள்ளவை:

 • பினாக்கிள் 10x மாற்றம்
 • புதிய மேம்படுத்தப்பட்ட ஒருங்கிணைந்த மொபைல் வங்கி (Integrated Mobile Banking System)
 • புதிய கணக்கு துவக்க மையத்தீர்வு ( Centralised Account Opening System)
 • வாடிக்கையாளர்களை அறிய காணொளி வழி VIDEO KYC.
 • வாடிக்கையாளர் தொடர்பு மேலாண்மை தீர்வு – Customer Relationship Management solution
 • கால் சென்டர் இயக்க அறிமுகம்
 • 2020 – 21 ம் நிதியாண்டின் வணிக இலக்கு:
  • ஒட்டுமொத்த வணிக உயர்வு ரூ.72,500 கோடி
  • ஒட்டுமொத்த டிபாசிட் உயர்வு ரூ.40,500 கோடி
  • ஒட்டுமொத்த கடன் வழங்குதல் ரூ.32,000 கோடி.
  • ஒட்டுமொத்த நடப்பு/ சேமிப்பு கணக்கு உயர்வு ரூ.10,800 கோடி
  • நிகர லாப இலக்கு ரூ.480 கோடி.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *