தமிழகத்தில் பிப்ரவரி 28 ஆம் தேதி வரை தளர்வுகளுடன் பொது முடக்கத்தை நீட்டித்து அரசு உத்தரவிட்டுள்ளது. வருகிற 8 ஆம் தேதி முதல் 9 மற்றும் 11 ஆம் வகுப்பு மாணவர்களுக்காக பள்ளிகளைத் திறக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதேபோல, தமிழகத்தில் உள்ள இளநிலை, முதுநிலை படிப்புகளுக்கான அனைத்து வகுப்புகளையும் வருகிற 8 ஆம் தேதி முதல் தொடங்குவதற்கு அரசு அனுமதி அளித்துள்ளது.

அதன்படி வரும் 8ஆம் தேதி முதல் திறக்கப்படும் அனைத்து கல்லூரிகளும் வாரத்திற்கு 6 நாட்கள் செயல்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. இந்த கல்வியாண்டு முழுவதும் கல்லூரிகள் வாரத்திற்கு 6 நாட்கள் செயல்படும் எனவும் அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *