high-court-01சமீபத்தில் சென்னை உள்பட பல மாவட்டங்களில் கனமழை பெய்ததால் மாணவர்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டதாகவும், அவர்கள் தேர்வுக்கு இன்னும் மனதளவில் தயாராகாததால் தமிழகம் முழுவதும் எஞ்சினியர் செமஸ்டர் தேர்வுகளை தேர்வுகளை தள்ளி வைக்க வேண்டும் என்றும் அப்துல்கலாம் விஷன் இந்தியா என்ற அறக்கட்டளையின் அறங்காவலர் குமார் சென்னை ஐகோர்ட்டில் பொதுநல மனு ஒன்றை தாக்கல் செய்தார்.

இந்த மனுவில் அவர் கூறியிருப்பதாவது, “வடகிழக்கு பருவ மழை தீவிரமடைந்ததால், தமிழகத்தில் கனமழை பொழிந்து, பல மாவட்டங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. பல இடங்களில் இன்றும் மின்சார இணைப்பு இல்லாமல் மக்கள் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இந்நிலையில், அண்ணா பல்கலைக்கழகம், வருகிற 15ஆம்தேதி முதல், என்ஜினீயரிங் முதலாம் ஆண்டு மாணவர்களுக்கு ‘செமஸ்டர்’ தேர்வுகள் நடத்தப்படும் என்று கடந்த 10ஆம்தேதி அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இந்த செமஸ்டர் தேர்வை தள்ளிவைக்கவேண்டும்’ என்று கூறியிருந்தார்.

மேலும் மனுதாரர் வக்கீல் ‘சென்னை உள்ளிட்ட 4 மாவட்டங்களுக்கு மட்டும் முதலாம் ஆண்டு என்ஜினீயரிங் மாணவர்களுக்கு மட்டும் செமஸ்டர் தேர்வு தள்ளிவைக்கப்பட்டுள்ளதாகவும், தமிழகம் முழுவதும் தேர்வை தள்ளி வைக்க அண்ணா பல்கலைக் கழகத்துக்கு உத்தரவிட வேண்டும் என்றும் வாதாடினார்.

இந்த மனு தலைமை நீதிபதி முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது அரசு வக்கீல் ஆஜராகி, ‘சென்னை, காஞ்சீபுரம், திருவள்ளூர், கடலூர் ஆகிய மாவட்டங்களை சேர்ந்த முதலாம் ஆண்டு என்ஜினீயரிங் மாணவர்களின் செமஸ்டர் தேர்வு டிசம்பர் 15ஆம்தேதி தொடங்குவதாக இருந்தது. இந்த தேர்வு டிசம்பர் 28ஆம்தேதி முதல் தொடங்கப்படும் என்று அண்ணா பல்கலைக்கழம் அறிவித்துள்ளது’ என்று கூறினார்.

இருதரப்பு வாதங்களையும் கேட்ட தலைமை நீதிபதி சஞ்சய்கிஷன்கவுல், நீதிபதி புஷ்பா சத்தியநாராயணா ஆகியோர் கொண்ட கவுன்சில் தமிழகம் முழுவதும் தேர்வுகளை தள்ளி வைக்க வைக்க வேண்டும் என்ற கோரிக்கையை ஏற்க முடியாது என்று உத்தரவிட்டனர்.
English summary-Exams cant postponed across tamilnadu-High court