vitcounselling15513பிளஸ் 2 முடித்த மாணவர்களுக்கு எம்.பி.பி.எஸ்., மற்றும் பி.டி.எஸ் படிப்புகளுக்கு சென்னையில் உள்ள ஓமந்தூரார் அரசு பல்நோக்கு உயர் சிறப்பு மருத்துவமனை அரங்கில் இரண்டாம் கட்டக் கலந்தாய்வு தற்போது நடைபெற்று வருகிறது. இந்த கலந்தாய்வில் தமிழகத்தில் சுயநிதி பல் மருத்துவக் கல்லூரிகளில் உள்ள 767 அரசு ஒதுக்கீட்டு பி.டி.எஸ். காலியிடங்களை நிரப்பப்படவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இரண்டாம் கட்டக் கலந்தாய்வின் இரண்டாம் நாளான நேற்று மொத்தம் 2,400 மாணவர்கள் அழைக்கப்பட்டிருந்தனர். ஆனால் இந்த கலந்தாய்வில் 1,767 மாணவர்கள் பங்கேற்கவில்லை. கலந்தாய்வில் பங்கேற்ற மாணவர்களில் அரசு எம்.பி.பி.எஸ்., அரசு ஒதுக்கீட்டு எம்.பி.பி.எஸ்., அரசு பி.டி.எஸ்., அரசு ஒதுக்கீட்டு பி.டி.எஸ். இடங்களில் சேர என மொத்தம் 175 மாணவர்களுக்கு சேர்க்கைக் கடிதம் நேரில் வழங்கப்பட்டது என்று மருத்துவக் கல்வி சேர்க்கைக் குழு செயலர் டாக்டர் உஷா சதாசிவம் தெரிவித்தார்.

மாணவர்களுக்கு சேர்க்கைக் கடிதம் அளித்த பிறகு, திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரியில் 1 எம்.பி.பி.எஸ். காலியிடம், சுயநிதி மருத்துவக் கல்லூரிகளில் 28 அரசு ஒதுக்கீட்டு எம்.பி.பி.எஸ். காலியிடங்கள், சென்னை பாரிமுனை அரசு பல் மருத்துவக் கல்லூரியில் 2 பி.டி.எஸ். காலியிடங்கள், சுயநிதி பல் மருத்துவக் கல்லூரிகளில் 767 அரசு ஒதுக்கீட்டு பி.டி.எஸ். காலியிடங்கள் உள்ளன. இந்தக் காலியிடங்களை நிரப்ப தொடர்ந்து வரும் இன்றும், நாளையும் கலந்தாய்வு நடத்தப்படுகிறது. கலந்தாய்வில் பங்கேற்று சேர்க்கைக் கடிதம் பெறும் மாணவர்கள் வரும் 31-ஆம் தேதிக்குள் உரிய கல்லூரியில் சேர வேண்டும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர். அரசு மருத்துவக் கல்லூரிகளில் முதலாம் ஆண்டு எம்.பி.பி.எஸ். படிப்புக்கு வரும் செப்டம்பர் 1-ஆம் தேதி வகுப்புகள் தொடங்கவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

English Summary:How many seats are vacant in MBBS and BDS