பெரிய நட்சத்திரங்களை நம்பாமல் திரைக்கதைக்கு மட்டுமே முக்கியத்துவம் கொடுத்து யதார்த்தமான படங்களை எடுத்து வெற்றி பெற்று வரும் இயக்குனர்களில் ஒருவர் பிரபுசாலமன். இவர் இயக்கிய மைனா, கும்கி, கயல் போன்ற படங்களின் வெற்றி, இவருடைய திரைக்கதைக்கு கிடைத்த வெற்றி என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் கடந்த வருடம் பிரபுசாலமன் இயக்கி வெற்றி பெற்ற கயல் படத்தின் நாயகன் சந்திரன் மற்றும் நாயகி ஆனந்தி ஆகிய இருவரையும் மீண்டும் ஒருமுறை தனது படத்தில் பயன்படுத்த பிரபு சாலமன் முடிவு செய்துள்ளார். ஆனால் இம்முறை அவர் இந்த இருவரையும் இயக்காமல், தான் தயாரிக்கவிருக்கும் புதிய படத்திற்காக நாயகன், நாயகியாக ஒப்பந்தம் செய்துள்ளார்.

இந்த படத்தை சமூக அக்கறையுடன் ‘சாட்டை’ என்ற படத்தை இயக்கிய ‘பைசல்’ இயக்கி வருகிறார். டி.இமான் இசையமைக்கவுள்ள இந்த படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பு முடிந்துவிட்டதாகவும், இன்னும் சில நாட்களில் இரண்டாவது கட்ட படப்பிடிப்பு ஆரம்பமாகவுள்ளதாகவும் கூறப்படுகிறது.

English Summary : After three consecutive hits Prabhu Solomon decides to direct a new film with “Kayal” hero and heroine.