letter-writing-27102015
சென்னை நகரை பொலிவுறும் நகரமாக மாற்றும் நடவடிக்கைகளில் சென்னை மாநகராட்சி தீவிரமாக ஈடுபட்டிருக்கும் நிலையில், இது தொடர்பாக கட்டுரை போட்டி ஒன்றை சென்னை மாநகராட்சி நடத்தவுள்ளது. இந்த கட்டுரை போட்டிகளில் கலந்து கொள்ள விரும்புபவர்கள் தங்கள் கட்டுரைகளை அக்டோபர் 30ஆம் தேதிக்குள் அனுப்ப வேண்டும் என சென்னை மாநகராட்சி அறிவித்துள்ளது

இதுகுறித்து சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு ஒன்றில் கூறியிருப்பதாவது, “மத்திய அரசின் நகர்ப்புற மேம்பாட்டுத் துறையின் மூலம் 98 நகரங்கள் பொலிவுறு நகரங்களாக மாற்றுவதற்கு தேர்வு செய்யப்பட்டுள்ளன. இதில், தமிழகத்தில் சென்னை உள்பட 12 நகரங்கள் அடங்கும். இந்நிலையில், சென்னை மாநகராட்சி சார்பில், பொலிவுறு நகரத்தில் மக்கள் எதிர்கொள்ளும் பிரச்னைகள், தீர்வுகள் குறித்து “என் நகரைப் பற்றிய என் கனவு’ (my dream about my city) என்னும் தலைப்பில் கட்டுரைப் போட்டி நடைபெறும்.

மாணவர்கள் ஆயிரம் வார்த்தைக்கு மிகாமல் தமிழ் அல்லது ஆங்கிலத்தில் கட்டுரையை எழுதலாம். கட்டுரை தலைப்பை உறையின் மீது குறிப்பிட்டு அக். 30-க்குள், “தலைமைக் கல்வி அதிகாரி, ரிப்பன் கட்டடம், சென்னை-3′ என்ற முகவரிக்கு மாணவர்கள் அனுப்ப வேண்டும். இதனுடன், தங்களது பெயர், வயது, படிக்கும் வகுப்பு, பள்ளியின் முகவரி, அடையாள அட்டை நகல் ஆகியவற்றை கட்டுரையோடு இணைத்து அனுப்ப வேண்டும். தேர்ந்தெடுக்கப்படும் மாணவர்களின் சிறப்பு கட்டுரைக்கு ரூ.5,000, ரூ.3,000, ரூ. 2,000 என மூன்று பரிசுகள் வழங்கப்பட உள்ளது.

பொது மக்களுக்கும் “என் நகரைப் பற்றிய என் கனவு’ என்ற தலைப்பு உள்பட மேலே குறிப்பிட்ட விவரங்களுடன் மாநகராட்சி அலுவலகத்துக்கு அனுப்ப வேண்டும். இதில், தேர்ந்தெடுக்கப்படுவோருக்கு ரூ. 25 ஆயிரம், ரூ.15 ஆயிரம், 10 ஆயிரம் என முதல் மூன்று பரிசுகள் வழங்கப்பட உள்ளன.

கட்டுரைகளை மேலே குறிப்பிட்டுள்ள விவரங்களுடன் smartcity@chennaicorporation.gov.in என்ற இணையதள முகவரியிலும் mygov.in என்ற இணையதளத்திலும் சமர்பிக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. English summary-Letter writing competition about Chennai smart city